சன் டிவியின் வெற்றிகரமான சீரியலின் இரண்டாம் பாகத்தில் மஹாலக்ஷ்மி.

0
40444
Mahalakshmi

சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். மேலும், நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள் பப்லியான தோற்றமும், கீச்சு கீச்சு குரல் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

நடிகை மகாலக்ஷ்மி அவர்கள் எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வருகின்றனர். இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

- Advertisement -

இந்த பிரச்சனையால் தேவதையை கண்டேன் சீரியல் தற்போது விரைவில் முடிய போகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இன்னும் இந்த சீரியல் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மஹாலக்ஷ்மி தரப்பில் இருந்து கூறியுள்ளார். இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “சித்தி 2″என்ற வெற்றிகரமான சீரியலில் நடிகை மஹாலக்ஷ்மி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சன் குடும்பம் விருது விழாவில் நடிகை மஹாலக்ஷ்மி அவர்களே நான் “சித்தி 2” சீரியலில் நடிக்க போகிறேன் என்று கூறி இருந்தார். சன் டிவி நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான “சித்தி” சீரியல் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது.

Image result for chithi 2

-விளம்பரம்-

இந்த சீரியல் மூலம் தான் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் சின்னத்திரையில் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது காரணம் . தற்போது இந்த “சித்தி ” சீரியலின் இரண்டாம் பாகம் அதாவது “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். தற்போது இந்த சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்திற்கான நடிகர்களை தேர்வு செய்து உள்ளார்கள். மேலும், இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்க உள்ளார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் என்ற தகவலும் வெளி வந்தது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் அதிக ஆர்வமுடன் சீரியலை எதிர்நோக்கி உள்ளனர்.

Advertisement