மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

0
531
Mahanadhi
- Advertisement -

மகாநதி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்கிற கதாபாத்திரம் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள். அவருக்கு மூத்த மகள் கங்காவும் இரண்டாவது மகள் காவேரியும், மூன்றாவது மகள் யமுனா, கடைசி மகள் நர்மதா என்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்தத் தொடரின் ஹீரோ நிவின் காவிரியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறான். அவர்கள் இருவருக்கும் காதல் மலர்வது ஒரு பக்கமாக இருக்கின்றது. மற்றொரு பக்கம் பசுபதியை காவேரி குடும்பத்திற்கு துரோகம் செய்து விடுகிறார். இதை அனைத்தையும் காவேரி தெரிந்து கொள்கிறாள். இதை பற்றி தெரிந்து கொண்ட பசுபதி தன்னுடைய மகள் ராகினியை நிவினுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஆனால் நிவினும் காவிரியும் பசுபதி உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலபடுத்தி காட்டுகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தான் கடைசி மகள் நர்மதாவுக்கு உடலில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனால் நர்மதாவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி சூழ்நிலை காரணத்தினால் அவர்கள் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்கள். காவிரி தன்னை அனைவரும் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தியதாக எண்ணி பசுபதி அவர்களும் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பது போல கதை நகர்கிறது. சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றார்கள்.
அந்த வீட்டில் உரிமையாளர் பெயர் விஜய்.

அவரும் பசுபதி இடம் சண்டை இட்டு காவிரி குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கின்றார். பசுபதி இடமிருந்து பணத்தை வாங்கி குமரனின் அக்கவுண்ட் இடமிருந்து செலுத்த சென்ற போது அந்த பணம் யாரும் எதிர்பாராதவிதமாக தொலைந்து போகின்றது. இதனால் நர்மதாவும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்க வேறு வழி இல்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்று காவேரி விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறாள்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இதனைப் பார்த்து விஜய் வீட்டார் அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். காவிரிக்கு திருமணம் நடந்தது தெரிந்து கொண்ட நிவின் மனம் உடைந்து போகிறான். காவிரியின் இந்த திருமணம் நீடிக்குமா? விஜய்- காவேரி இருவர் மத்தியில் காதல் மலருமா? உண்மையை நவீன் தெரிந்து கொள்வாரா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மகாநதி சீரியல் இருந்து முக்கிய நடிகை விலகி இருக்கும் தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது. மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரதீபா

சீரியலில் நடிகை மாற்றம்:

இந்த சீரியல் தொடக்கத்தில் இருந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தற்போது இவர் இந்த சீரியலில் திடீரென்று விலகி இருக்கிறார். இவர் ஏன் விலகினார் என்று தான் தெரியவில்லை. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் நடிக்கிறார். இன்றிலிருந்து இவருடைய காட்சி டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சீரியலில் விலகிய காரணம் குறித்து கேட்டு வருகிறார்கள்.

Advertisement