28 வயதே ஆன இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நல குறைவால் காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்தவர் பிரவீன் குமார். இவர் இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவருடைய இசை ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். அதற்குப்பின் இவர் நேற்று ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமாகி இருக்கிறார்.
பிரவீன் குமார் இறப்பு:
இவருக்கு தற்போது 28 வயது தான். இவருடைய இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணி அளவில் வடக்கு வாசலில் அவருடைய வீட்டில் நடைபெற இருக்கிறது. மேலும், இளம் வயதிலேயே இசையமைப்பாளர் பிரவின் குமார் காலமாகி இருப்பது திரைபிரபலங்கள் மத்தியில் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.
உமா ரமணன் குறித்த தகவல்:
ஏற்கனவே தமிழ் சினிமா உலகில் பிரபலமான பாடகியாக இருந்தவர் உமா ரமணன். இவர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ்த்திறவாய் என்ற பாடலின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். மேலும், இவர் எம் எஸ் வி, இளையராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார்.
உமா ரமணன் இறப்பு:
ஒரு காலத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதற்கு பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த உடன் இவர் மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இதனிடையே இவர் பாடகர் ரமணன் என்பவரை திருமணம் செய்தார். ரமணனும் பிரபல பின்னணி பாடகர் ஆவார். இவர் ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே உமா உடல்நிலை சரி இல்லாமல் அவஸ்தை பட்டு இருந்தார்.
பிரபலங்கள் இரங்கல்:
இப்படி இருக்கும் நிலையில் நேற்று காலை உமா இறந்து விட்டார். தற்போது இவருக்கு 69 வயது. இவருடைய மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய இறுதி சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவருடைய வீட்டில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து இசை பிரபலங்கள் இறந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சி தான்.