விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பாட்டி, காவிரி வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. வழக்கம் போல காவிரியை குறை சொல்லிக் கொண்டே தான் இருந்தார். பின் தாத்தா, காவிரிக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசினார். வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்றார்கள். பின் பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? நாங்கள் இல்லையா? என்றெல்லாம் வழக்கம் போல காவிரியை திட்டிக் கொண்டிருந்தார். விஜய், தன் பாட்டியை சமாதானம் செய்ய நினைத்தார். ஆனால், அவர் கேட்கவில்லை.

வளைகாப்பிற்கு தேவையான பொருட்களை எல்லாம் தாத்தா, பாட்டி வாங்கி வந்து காவிரியின் வீட்டில் வைத்துவிட்டு சென்றார்கள். அந்த சமயம் வந்த கங்காவிடம் சாரதா, விஜய் பாட்டி வந்து போன விஷயத்தை எல்லாம் சொன்னார். உடனே கங்கா, எனக்கு வளைகாப்பு இல்லையா? என்றார். சாரதா, உனக்கு ஏழாம் மாதம் நடத்துகிறோம். இரண்டு பேருக்கும் சேர்ந்து நடத்துகிறோம் என்றார். ஆனால், கங்கா ஒத்துக் கொள்ளவே இல்லை. எனக்கு ஐந்தாம் மாதமே நடத்த வேண்டும். இல்லை என்றால் வளைகாப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
மகாநதி:
அதற்குப் பின் கடையில் கங்கா வளைகாப்பு நினைத்து கோபமாக இருந்தார். அந்த சமயம் வந்த யமுனாவிடம் வீட்டில் வளைகாப்பு பற்றி பேசிய விஷயத்தை எல்லாம் கங்கா சொன்னார். யமுனா, வழக்கம் போல் காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் காவிரி -விஜய் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரிக்காக வாங்கி வைத்த முருகர் செயினை விஜய் போட்டு விட்டார். இன்னொரு பக்கம் கங்கா கோபமாக இருந்தார். குமரன் எவ்வளவோ சமாதானம் செய்துமே கங்கா கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கங்காவின் வளகாப்பு பற்றி வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கங்கா திட்டியதை எல்லாம் குமரன் நினைத்து பார்க்கிறார். அந்த சமயம் வந்த காவிரி, விஜய் தனக்காக வாங்கி தந்த செயினை பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார். இது எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் வருகிறது. அதற்குப்பின் கங்காவிற்கு முன்னாடியே வளைகாப்பு வைக்கும் விஷயத்தைப் பற்றி காவிரியிடம் சொல்கிறார்கள். காவிரி சூழ்நிலை புரிந்து கொண்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவருமே தங்களுடைய வளைகாப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
காவிரி, எனக்கு சிம்பிளாக இருந்தா போதும் என்று தனக்கு எப்படி வளைகாப்பு நடக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் குமரன், கங்காவிடம் உனக்கு வளைகாப்பிற்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு கங்கா, எனக்கு ஒட்டியானம் ரொம்ப பிடிக்கும். ஆனால், உங்களால் அதெல்லாம் வாங்கித் தர முடியாது. வீட்டிற்கு வந்தவர்களுக்கு சாப்பாடு ஒழுங்கா போட்டா போதும். நான் வசதியாக வாழனும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு தான் கொடுப்பினை இல்லை என்றெல்லாம் குமரன் மனது கஷ்டப்படுவது போலவே பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






