விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், கங்கா- யமுனா இருவரையும் சந்தித்து பேசி இருந்தார். அதற்குப் பிறகு காவிரியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் வீட்டில் தடபுடலாக நடக்கிறது. எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து விஜய், அம்மு இருவரும் காவிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அம்மு, என்னுடைய அம்மாவிற்கும் இன்று தான் பிறந்தநாள். என் அம்மாவின் பிறந்த நாளை நான் கொண்டாடியது இல்லை என்றார். உடனே காவிரி, அம்முவை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார்.

சிறப்பாக காவிரி பிறந்த நாளை கொண்டாடினார்கள். காவிரி. விஜய்க்கு கேக் கொடுத்தார். விஜயும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் யாழினி- அம்மு இருவரும் ஜாலியாக விளையாடினார்கள். அதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டார்கள். அப்போது கங்கா, உன் ஸ்டுடண்ஸ் அப்பா ரொம்ப ஹான்சமாக இருந்தார். நீயே காதலித்து கல்யாணம் செய்து கொள் என்றார். காவிரி, தன் அக்காவை திட்டினாலும் மனதுக்குள் விஜயை ரசிக்கிறார்.
மகாநதி:
பின் அம்மு காவிரியின் வீட்டிலேயே தூங்குகிறேன் என்று கேட்டதால் விஜயை ஒத்துக் கொண்டார். பின் காவிரி முதன்முதலாக தன்னுடைய மகளுடன் சேர்ந்து தூங்கினார். இதை பார்த்து சாரதாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மறுநாள் காலையில் கங்கா- யமுனா இருவரும் தங்களுடைய ஊருக்கு கிளம்பினார்கள். அப்போது வந்த விஜய், அம்முவை ஸ்கூலுக்கு ரெடி பண்ண அழைத்து சென்றார். சாரதா, நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார். விஜய் சந்தோசப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி பள்ளிக்கூடத்திற்கு தனியாக நடந்து செல்கிறார். விஜய், அவரை பின் தொடர்ந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் காவிரி கோபப்பட்டு விஜயை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்கு பின் பள்ளியில் காவிரியை சந்தித்து பிரின்ஸ்பல், நீங்கள் அம்மு விடம் மட்டும் அதிக அக்கறை செலுத்தாதீர்கள். மற்ற பேரன்ஸ்க்கு தெரிந்தால் பிரச்சினை ஆகும். எல்லோரையும் சமமாக நடத்துங்கள் என்று சொல்கிறார். இதனால் காவேரி, அம்முவிடம் நெருக்கமாக பழகுவதை நிறுத்த நினைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அம்மு, சாப்பிட வந்தாலும், ஏதாவது கேட்டாலுமே காவிரி ஒரு ஆசிரியர் போலவே நடந்து கொள்கிறார். இதனால் அம்முவிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பின் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அம்மு, காவிரிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அம்மு, நானும் உங்களுடன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்கிறார். காவேரி, அதெல்லாம் தேவையில்லை. உன்னுடைய அப்பா வந்தவுடன் கிளம்பு. என் வீட்டிற்கு எல்லாம் வர வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் அம்மு ரொம்பவே வருத்தப்படுபடுகிறார்.






