விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்மு தங்களுடைய ரூமை பற்றி சொன்னார். காவிரியும் சந்தோஷப்பட்டார். அங்கு ரூமில் காவிரியின் உடைய பழைய பொருட்களை எல்லாம் அம்மு காண்பித்தார். அதை பார்த்து காவிரிக்கு ஞாபகம் வருமா? என்று விஜய் பார்த்தார். ஆனால் காவிரிக்கு எந்த ஞாபகமே வரவில்லை. காவிரி, எதற்காக இந்த பொருளை வைத்திருக்கிறீர்கள் என்றார். விஜய், என் மனைவியின் ஞாபகம் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

அதற்குப்பின் சாரதாவிடம் விஜயின் தாத்தா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். சாரதாவும் பழைய விஷயத்தை மறந்துவிடலாம் என்று சொன்னார். பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சந்தோஷமாக சாப்பிட்டார்கள். விஜய், காவிரிக்கு பிடித்த பலகாரத்தை செய்து கொடுத்தார். இருந்தும் காவிரிக்கு பழைய ஞாபகங்கள் எதுவுமே வரவில்லை. சித்தப்பா, உண்மையை சொல்லாமல் காவிரியின் குடும்பத்தை முறைத்துக் கொண்டு இருந்தார்.
மகாநதி:
காவேரி- சாரதா இருவருமே விஜயின் வீட்டில் உள்ள எல்லோரும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அப்போது விஜய், நானே உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்றார். அதற்கு பின் காரில் வரும்போது விஜய், காவிரியின் உடைய பழைய நினைவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தி பார்த்தார். ஆனால், காவிரிக்கு எந்த ஞாபகமே வரவில்லை. விஜய், எப்படியாவது உனக்கு பழைய ஞாபகத்தை கொண்டு வருவேன் என்று தன் மனதிற்குள் சென்றார். இது ஒரு பக்கம் விஜயின் சித்தப்பா அன்பரசனின் காரின் மீது ராகவின் கார் மோதும் படி வந்து நிற்கிறது.

சீரியல் ட்ராக்:
ராகவ், நான் ஐந்து வருஷத்துக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். விஜய், காவிரியை பழி வாங்காமல் விடமாட்டேன் என்றெல்லாம் சொன்னார். சித்தப்பா, காவிரிக்கு பழைய நினைவுகள் எதுவும் இல்லை என்று நடந்தது எல்லாம் சொன்னார். இருந்தாலும் ராகவ் அவர்கள் இருவரையும் பழிவாங்கியே தீருவேன் என்றார். காவிரியின் பிறந்தநாளுக்காக கங்கா -யமுனா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். தன் சகோதரிகளை பார்த்தவுடன் காவேரி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் காவிரி பள்ளிக்கு கிளம்பி செல்கிறார். அங்கு விஜய் காத்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பரிசு கொடுக்கிறார்.
காவேரி தயங்குகிறார், இருந்தாலும் அம்மு சொன்னதால் பரிசை வாங்கிக் கொள்கிறார். அதற்குப்பின் விஜய், கங்கா- யமுனா இருவரையும் சந்தித்து பேசுகிறார். அதற்குப் பிறகு காவிரியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் வீட்டில் தடபுடலாக நடக்கிறது. எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து விஜய், அம்மு இருவரும் காவிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அப்போது அம்மு, என்னுடைய அம்மாவிற்கும் இன்று தான் பிறந்தநாள். என் அம்மாவின் பிறந்த நாளை நான் கொண்டாடியது இல்லை என்கிறார். உடனே காவிரி, அம்முவை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுகிறார். இதை பார்த்து விஜய் எமோஷனலாக அழுகிறார்.






