விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்முவின் மனதில் காவேரி ரொம்பவே நெருக்கமாகிவிட்டாள். அம்மு அவளுடனே இருக்க நினைக்கிறாள் என்றார். அந்த சமயம் பார்த்து சாரதா, கங்கா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். விஜய், எதற்காக வந்தீர்கள்? இது தெரிந்தாலும் காவிரி என்னை தான் குறை சொல்லுவாள் என்றார். சாரதா, நான் அம்முவை பார்க்கவும் அவளை என்னுடன் அழைத்துப் போகும் தான் வந்தேன் என்றார். விஜய் முடியாது என்று மறுத்தார். ஒரு கட்டத்தில் சாரதா கெஞ்சி கேட்டதால் விஜய் ஒத்துக் கொண்டார்.

சாரதா, அம்முவை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டார். அம்மு, கங்காவின் மகளை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார். இருவருமே ஜாலியாக விளையாடுகிறார்கள். காவிரியின் வாழ்க்கையை நினைத்து மொத்த குடும்பமே கவலை படுகிறது. இன்னொரு பக்கம் காவேரி, அம்மு ஸ்கூலுக்கு வராத விஷயத்தை பிரின்ஸ்பல் இடம் சொன்னார். பிரின்ஸ்பல் விஜய்க்கு போன் செய்து விசாரித்தார். விஜய், இனிமேல் அம்மு வரமாட்டாள். நான் வேறு ஸ்கூல் சேர்த்த போகிறேன் என்று சொல்லிவிட்டார். இதனால் காவிரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
மகாநதி:
அதற்குப்பின் நிவின், சாரதா இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை கார்த்திக் வீட்டிற்கு சென்று இருந்தார்கள். அங்கு சாரதா, காவிரிக்கு கொஞ்ச நாளாக உடல்நிலை சரியில்லை. விபத்துக்கு பிறகு அவள் ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறாள். அவளைப் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும். அதற்காகத்தான் உண்மையை சொல்லி விடுகிறேன். அவளை வைத்து வாழுவது ரொம்பவே கஷ்டம். இதை நான் ஏற்கனவே உங்கள் பையனிடம் சொல்லிவிட்டேன். இருந்தாலும் உங்களிடம் உண்மையை சொல்கிறேன் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்று விட்டார். இதனால் மாப்பிள்ளையின் அம்மா அப்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா செய்த வேலையால் மாப்பிள்ளை கார்த்தி, திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் காவேரி பயங்கரமாக கோபப்படுகிறார். அதோடு இதற்கு எல்லாம் காரணம் விஜய் தான் என நினைத்துக் கொண்டு சண்டை போடுகிறார். விஜய், எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். இருந்தாலும் காவிரி நம்பவில்லை. காவிரி தன்னுடைய அம்மாவிடம் விஜய் சொன்னதை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். சாரதா அதற்கு சம்பந்தம் இல்லாதது போலவே அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் விஜய், அம்முவை வேறு ஸ்கூலில் சேர்ப்பதை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். தாத்தா சோமு, காவிரி சொல்வதற்காக நீ அம்முவை எத்தனை ஸ்கூலில் மாற்ற முடியும்? அம்மு பாவம். அவளை நினைத்து பார் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். பின் அம்முவிடம் விஜய், நீ காவேரி மிஸ்ஷிடம் ரொம்ப நெருங்கி பழகாதே. எல்லாம் ஸ்டுடென்ட் போலவே நீயும் டிஸ்டன்ஸ் ஓட இரு என்கிறார். அம்முவும் சரி என்கிறார். அதற்குப்பின் பள்ளிக்கூடத்திற்கு அம்மு வந்திருப்பதை பார்த்து காவிரி சந்தோஷப்படுகிறார். காவிரி, அம்முவை கட்டி அணைத்து எமோஷனலாக அழுகிறார். ஆனால், அம்மு தன் தந்தை சொன்னதை நினைத்து பார்த்து நான் கிளம்புகிறேன் எனக்கு நேரம் ஆகிறது என்று காவேரியை விட்டு விலகி செல்கிறார். இதை பார்த்து காவிரிக்கு கஷ்டமாக இருக்கிறது






