விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி வேண்டாம் என்று சொல்வதற்குள் சாரதா ஒத்துக் கொண்டார். விஜய் கிளம்பியவுடன் சாரதாவிடம் காவேரி, எதற்காக அந்த ஆள் இந்த வீட்டிற்கு வரவேண்டும். நீங்கள் எதற்கு அவர்கள் வீட்டிற்கு போகணும். அவர்கள் வீட்டு ஆட்களை பற்றி எதற்கு கேட்கிறீர்கள்? நான் அவர் வீட்டிற்கு வர மாட்டேன் என்றெல்லாம் சண்டை போட்டார். சாரதாவால் எதுவுமே பேச முடியவில்லை.

சாரதா, காவிரி- விஜய்- அம்மு மூவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை கங்கா, யமுனாவிற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் எல்லோருமே போட்டோ பார்த்து ரொம்ப சந்தோஷம். பின் சாரதா, காவிரியின் பிறந்தநாள் வருவதால் நீங்கள் எல்லோருமே வீட்டிற்கு வாருங்கள் விஜய்யும் வர சொல்லி இருக்கிறேன் என்றார். கங்கா- யமுனா இருவரும் சரி என்றார்கள். இன்னொரு பக்கம் விஜய், காவிரியை வீட்டிற்கு அழைத்திருக்கிறேன் என்றார். தாத்தாவிற்கு காவிரி வருவதில் சந்தோஷம்.
மகாநதி:
அன்பரசு, காவிரி இல்லாமல் நீயும் குழந்தையும் சந்தோஷமாக இல்லையா? இனிமேல் எதற்கு காவிரியுடன் சேர்க்க பார்க்கிறாய் என்று கேட்டார். கோபத்தில் விஜய், தன்னுடைய சித்தப்பாவை திட்டி விட்டார். அதற்குப்பின் காவிரி ஸ்கூலுக்கு தயாராகி வந்தார். அப்போது விஜய்-அம்மு இருவரும் வந்தார்கள். விஜய், காவேரி இடம் ரொம்ப பாசமாக பேசி இருந்தார். கோபத்தில் காவிரி, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். என்னிடம் ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றெல்லாம் திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சாரதா, விஜயின் வீட்டிற்கு போவதால் நிறைய பலகாரம் செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்து காவிரிக்கு கடுப்பாகிறது. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று தன் அம்மாவை திட்டிக் கொண்டிருக்கிறார். சாரதா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இன்னொரு பக்கம் விஜய், காவேரி வீட்டிற்கு வருவதால் யாரையும் சமைக்க விடாமல் தன் கையாலே விதவிதமாக சமைத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து தாத்தாவிற்கு சந்தோசம்.

சீரியல் ட்ராக்:
சித்தப்பா அன்பரசு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. காவிரியால் விஜயின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது என்று சொல்கிறார். தாத்தா, காவிரி இருந்தால் தான் விஜய் சந்தோஷமாக இருப்பான். அவன் விருப்பப்படி நடக்கட்டும். எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார். அதற்குப்பின் சாரதா- காவிரி இருவரும் விஜயின் வீட்டிற்கு வருகிறார்கள். விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். பின் விஜய் தன்னுடைய தாத்தா சித்தி, சித்தப்பாவை எல்லாம் காவிரிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.






