விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரியிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்று அம்மு சொல்லக்கூடாது என்றார். அம்மு சரி என்றார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்முவை பார்த்து காவிரி ரொம்ப எமோஷனலாக விசாரித்தார். அம்முவும் ரொம்ப சந்தோஷமாக தன்னுடைய அம்மாவிடம் பேசி இருந்தார். ஆனால், உண்மையை எதுவுமே சொல்லவில்லை. பின் கிளாஸ் ரூமில் அம்மு, என்னுடைய அம்மா இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று தன்னுடைய நண்பர்களுடன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய அம்மா காவிரி தான் என்று உண்மையை சொல்லவில்லை.

காவேரி- அம்மு தன்னுடைய அம்மா காவிரியை ரசித்து பார்த்து சந்தோசப்பட்டார். அதுமட்டுமில்லாமல் சாப்பாட்டை ஊட்டி விட சொல்ல, காவிரியும் ஊட்டி விட்டார். அதற்குப்பின் யாழினி, அம்மு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாழினி, உன் அம்மா இறந்து விட்டதாக சொல்லிவிட்டு, ஏன் இப்போது உயிருடன் இருக்கிறாய்? என்றார். அதற்கு அம்மு, என்னுடைய அம்மா உயிருடன் தான் இருந்தார். உன்னுடைய காவிரி சித்தியும் என்னுடைய அம்மாவும் ஒன்றுதான் என்று நடந்த உண்மை சொன்னார். யாழினி, நான் இதை சித்தி இடம் சொல்லப்போகிறேன் என்றார். உடனே யாழினி கையை பிடித்து உண்மையை சொல்லக்கூடாது என்று அம்மு தடுத்தார்.
மகாநதி:
கோபத்தில் யாழினி கையை உதறும் போது கீழே தவறி விழுந்து விட்டார். அப்போது வந்து காவிரி,யாழினிக்கு முதலுதவி செய்தார். இதனால் யாழினி, அம்மு மீது கோபமாக இருந்தார். அம்மு, மன்னிப்பு கேட்டுவிட்டு உண்மை தெரிந்தால் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போகும் தயவு செய்து சொல்லாதே என்று யாழினியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். இன்னொரு பக்கம் சாரதா, அம்முவிற்கு காவிரி தான் தன் அம்மா என்ற உண்மை தெரிந்த விஷயத்தை சொன்னார். இதைக்கேட்டு நிவின், யமுனா எல்லோரும் ஷாக் ஆனார்கள். எப்படியாவது விஜய் காவிரியை சேர்த்து வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
காவேரி, விஜயை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்ட விஷயத்தை பற்றி நிவின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். எல்லோருமே விஜய்- காவிரி சேருவதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். இதைப் பற்றி நிவின், விஜயை சந்தித்து சொன்னார். விஜய் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். அதற்குப்பின் காவிரியிடம், திருமண விஷயத்தைப் பற்றி வீட்டில் எல்லோரும் பேசி இருந்தார்கள். காவிரி, நான் விஜய் சந்தித்து பேசணும். அதற்கு பிறகு தான் என்னுடைய இறுதியான முடிவை சொல்வேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் விஜய், காவிரியை அழைத்துக் கொண்டு தங்களுடைய பழைய வீட்டிற்கு வருகிறார்கள். காவிரி, இந்த வீடு ஏற்கனவே தெரியும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நான் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன் என்று சொல்கிறார். பின் விஜய் தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்த நினைவுகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். காவிரிக்கு அப்போது பழைய நினைவுகள் எல்லாம் வந்து செல்கிறது. ஆனால், அவருக்கு தெளிவாக எந்த ஒரு நினைவுகளும் வரவில்லை. காவிரி அந்த பழைய நினைவுகள் வருவதற்காக ரொம்பவே கஷ்டப்படுவதை விஜய் கண்டு வருத்தப்படுகிறார். கடைசியில் காவிரிக்கு எல்லா நினைவுகளும் வருகிறது.





