விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, பள்ளிக்கு கிளம்பி சென்று விட்டார். இன்னொரு பக்கம் காவிரி சொன்னதை எல்லாம் நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்பட்டார்.
அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் ஒரு விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பிள்ளைகள் அம்மாவுடன் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். இதை கேட்டு அம்மு ரொம்பவே வருத்தப்பட்டார். தனக்கு அம்மா இல்லாததால் அம்மு எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதை எல்லாம் கவனித்த காவிரி ரொம்பவே வருத்தப்பட்டார்.

வீட்டிற்கு சென்ற விஜய் இடம் காவிரி பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி எமோஷனாக அழுதார் சாரதா. விஜயுமே சாரதாவிற்கு ஆறுதல் சொன்னார். பின் விஜய், காவிரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொன்னார். அதற்குப் பிறகு விஜய் தன்னுடைய வீட்டிற்கு போனார். அப்போது விஜய்யை ஏற்கனவே பார்த்து சென்ற பெண்ணுடைய பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் திருமணத்திற்கு சம்மதமா என்று கேட்டார்கள். விஜய் ஏதேதோ சொல்லி சமாளித்து அவர்களை அனுப்பி விட்டார்.
மகாநதி:
பின் காவிரி செய்த வேலை எல்லாம் தன்னுடைய தாத்தாவிடம் சொல்லி புலம்பினார் விஜய். அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் விஜய், இனிமேல் நான் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அதேபோல் நீங்கள் எனக்கு எந்த பெண்ணையும் பார்க்க தேவையில்லை. உங்கள் வேலையை பாருங்கள் என்றார். காவிரியும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு போனார். அங்கு சாரதா இல்லை. காவிரி, தன்னுடைய சகோதரிகளிடம் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் வீடு முழுக்க தன் அம்மாவை தேடினார் காவிரி. ஆனால், எங்கேயுமே சாரதா இல்லை. இதனால் காவேரி ரொம்பவே பயப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி வீடு முழுக்க தன்னுடைய அம்மாவை தேடுகிறார். அங்கு இல்லை என்றவுடன் தான் இருக்கும் தெரு, கோயில், கடை என்று எல்லா இடத்திலும் சாரதாவை தேடி அலைகிறார் காவிரி. எங்குமே சாரதா கிடைக்கவில்லை. பின் தன்னுடைய சகோதரிகளிடம் நடந்ததை சொல்லி காவிரி அழுகிறார். அதற்குப்பின் விஜய்க்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் காவிரி சொல்கிறார். உடனே விஜய் வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் விஜய், காவிரிக்கு சமாதானம் சொல்லி சாரதாவை தேடி அலைகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று பொது இடங்களில் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாரதா எங்குமே இல்லை. இதனால் காவேரி ரொம்பவே உடைந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் காவிரி, சாரதாவை பார்த்து விடுகிறார். பின் தன் அம்மாவை திட்டிக் கொண்டிருக்கிறார். சாரதா, நீதான் என்னை வீட்டை விட்டுப் போக சொன்னாய். நான் கொடைக்கானல் போகிறேன் என்று சொல்கிறார். விஜய், சாரதாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார்.






