விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரியை அழைத்துக் கொண்டு குமரன் கடைக்கு தான் போனார். குமரன் கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்த்து காவேரி வருத்தப்பட்டார். கங்காவின் வளைகாப்பிற்காக தான் இது எல்லாம் குமரன் செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டு காவேரி பாராட்டினார். உடனே குமரன், இந்த உண்மையை கங்காவிடம் சொல்ல வேண்டாம் என்றார். மறுநாள் கங்காவின் வளைகாப்பிற்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. குமரன் வரவில்லை என்று கங்கா பயங்கர கோபத்தில் இருந்தார்.

காவிரியும் உண்மையை சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் குமரன் தன்னுடைய ஆர்டரை முக்கால்வாசி முடித்து விட்டார். பின் அந்த ஆர்டர் கொடுத்த நபர்களிடம் முழு பணத்தையும் குமரன் கேட்டார். ஆனால், அவர்கள் தர முடியாது என்று சொல்வதால் குமரனுக்கும் ஆர்டர் கொடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இன்னொரு பக்கம் குமரன் வராததால் வீட்டில் எல்லோருமே கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். விஜய்யுமே குமரனுக்கு போன் செய்து விசாரித்தார்.
மகாநதி
நேற்று எபிசோட்டில் குமரன் ஒரு வழியாக வளைகாப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விட்டார். குமரன் பார்த்தவுடன் கங்கா பயங்கரமாக கோபப்பட்டார். பின் தயாராகி மேடைக்கு வந்த குமரனை பார்த்து கங்கா கோபப்பட்டார். உடனே கங்கா, மாலையை கீழே தூக்கி போட்டு பயங்கரமாக கத்தி சண்டை போட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே கங்காவை அமைதியாக இருக்க சொன்னார்கள். பின் குமரன், உனக்கு ஆசைப்பட்ட ஒட்டியானம் வாங்க தான் நான் வீட்டுக்கு வராமல் வேலை செய்தேன்.

நேற்று எபிசோட்:
என்னை மன்னித்து விடு கங்கா. என்னால் முடிந்த வரை செய்கிறேன். ஆனால், உன்னுடைய ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்று ரொம்ப எமோஷனாக பேசி இருந்தார். குமரன் அம்மா, கங்காவை திட்டினார். பின் குமரன் பேசியதை கேட்டு கங்கா அமைதியாகி விட்டார். அதன் பின் கங்காவிற்காக தான் வாங்கி வந்த ஒட்டியாணம் போட்டு விட்டு அழகு பார்த்தார் குமரன். பின் வளைகாப்பு நடந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கங்காவின் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லோருமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். பின் குமரன், நீ நினைத்தது போல் என்னை மாற்றிக் கொண்டு வாழணும்னு நினைக்கிறேன். ஆனால், நீ என்னை ரொம்பவே அவமானப்படுத்துகிறார். இருந்தாலும் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என்று ரொம்ப எமோஷனாக தன் மனதில் இருக்கும் வலியையும் காதலையும் சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு கங்கா குற்ற உணர்ச்சியில் அமைதியாக நிற்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே குமரனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கங்கா செய்த தவறுக்காக திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.






