விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், நீங்கள் கொடைக்கானல் வீட்டை விற்பதாக இருந்தால் நானே வாங்கிக் கொள்கிறேன். காவிரி பெயரில் எழுதிக் கொடுங்கள். மார்க்கெட்டில் என்ன தொகை போகிறதோ அதே வாங்கிக் கொள்கிறேன். நான் குறைவாக எல்லாம் கேட்க மாட்டேன். வெளியில் வீட்டை விற்பதற்கு காவிரிக்கு விருப்பமே இல்லை. உங்களுக்கு பண தேவை என்பதால் நானே வாங்கிக் கொள்கிறேன். அந்த வீடு காவிரி பெயரில் இருந்தாலுமே உங்கள் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. நீங்கள் எல்லோருமே அங்கு போகலாம், வரலாம் என்றார்.

இதை கேட்டவுடன் சாரதா சந்தோஷப்பட்டார். ஆனால், கங்கா-யமுனாவிற்கு விருப்பமே கிடையாது. கங்கா அதெல்லாம் முடியாது என்றார். அதற்குப்பின் சாரதா, காவிரி பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறாய் என்றார். அதற்கு கங்கா, அதெல்லாம் முடியாது. அது அவர் பெயரில் கொடுத்தால் நமக்கு எப்படி உரிமை கொண்டாட முடியும் என்றார். பின் சாரதா, யாரோ எடுத்துச் செல்வதற்கு காவிரி பெயரில் இருந்தால் நம்முடைய வீடு நம்மிடமே இருக்கும். எதற்கு அவள் மீது இவ்வளவு பொறாமைப்படுகிறீர்கள் என்றெல்லாம் திட்டினார். இருந்தாலுமே கங்கா- யமுனா கேட்கவில்லை. இருவருமே பிடிவாதமாக இருந்தார்கள்.
மகாநதி:
காவிரிக்கு போன் செய்து கங்கா- யமுனா இருவரும் பேசி இருந்தார்கள். அப்போது கங்கா, நீ கொடைக்கானல் வீட்டை வாங்க போறியா? என்றார். அதற்கு காவிரி, எல்லோரும் முன்பு தானே சொன்னேன். வேறு ஒருவர் வாங்குவதற்கு நான் வாங்கினால் அது நம்முடையதாகவே இருக்கும். எனக்கு அந்த வீடு யார் கைக்கு போகக்கூடாது. அது அப்பாவுடைய வீடு என்று ரொம்ப சென்டிமெண்டாக பேசி இருந்தார். இதை கேட்டு கடுப்பான கங்கா, நாங்கள் வீட்டை விற்கத் தான் போகிறோம். ஆனால், உனக்கு கொடுக்க முடியாது. வீட்டை வாங்கும் எண்ணத்தை விட்டு விடு என்றெல்லாம் இருவரும் சேர்ந்து மிரட்டினார்கள்.

சீரியல் ட்ராக்:
உடனே காவிரி, வீட்டை விற்றால் நான் தான் வாங்குவேன் என்று சவால் விட்டு போனை வைத்து விட்டார். அதற்குப்பின் கங்கா- யமுனா பேசியதை பற்றி விஜய்யிடம் சொல்லி காவிரி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். விஜய், இரண்டு பேரையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நீ கொஞ்சம் வசதியாக இருக்கிறாய். அந்த பொறாமையில் கூட அவர்கள் இப்படி சொல்லலாம். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். மறுநாள் காலையில் சாரதா, தன் மகள்களை வீட்டிற்கு வரவைத்தார். அப்போது கொடைக்கானல் வீட்டை விற்பதை பற்றி சாரதா பேசுகிறார். கங்கா, காவிரிக்கு கொடுக்கக் கூடாது. எனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடலாம் என்றார். அதற்கு காவேரி, அந்த வீட்டை நான் தான் வாங்குவேன் என்றார்.
https://www.youtube.com/watch?v=gzm6UmV8w4o
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கொடைக்கானலில் இருக்கும் தங்களுடைய வீட்டிற்கு சாரதா மற்றும் விஜய் குடும்பத்தினர் சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று நான் தான் சந்தானத்தின் இரண்டாவது மனைவி என்று ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வருகிறார். அதை பார்த்து சாரதாவிற்கு ஷாக் ஆகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே அவர்கள் காண்பிக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகிறார்கள்.






