விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். இதை கேட்டு சாரதா-கங்கா ஷாக் ஆனார்கள். கங்கா, அவர் என்ன வேனாலும் செய்து கொள்ளட்டும். நீ எதற்கு கவலைப்படுகிறாய் உன்னுடைய வேலையை பார் என்றார். இருந்தாலும் காவிரிக்கு கஷ்டமாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய், காவிரியுடன் இருக்கும் புகைப்படத்தை எல்லாம் பார்த்து வேதனைப்பட்டார். இதை கவனித்த அம்மு, விஜய் இல்லாத நேரம் பார்த்து புகைப்படத்தை எடுக்கப் போனார். அதற்குள் வந்த விஜய், அம்முவை கடுமையாக திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.

விஜய் ரொம்ப கடுமையாக நடந்து கொண்டதால் அம்மு அழுது கொண்டே இருந்தார். தாத்தா, ராதா பாட்டி எல்லோருமே சமாதானம் செய்தும் அம்மு கேட்கவில்லை. பின் அம்மு, சாரதாவிற்கு ஃபோன் செய்து பேசி இருந்தார். அப்போது அம்மு, என்னை பார்க்க வர மாட்டீர்களா? என்னை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு சாரதாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் தாத்தா, விஜய் இடம் அம்முவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். விஜய், நான் கோபத்தில் அப்படி பேசி இருக்கக் கூடாது.
மகாநதி:
அம்முவின் மனதில் காவேரி ரொம்பவே நெருக்கமாகிவிட்டாள். அம்மு அவளுடனே இருக்க நினைக்கிறாள் என்றார். அந்த சமயம் பார்த்து சாரதா, கங்கா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். விஜய், எதற்காக வந்தீர்கள்? இது தெரிந்தாலும் காவிரி என்னை தான் குறை சொல்லுவாள் என்றார். சாரதா, நான் அம்முவை பார்க்கவும் அவளை என்னுடன் அழைத்துப் போகும் தான் வந்தேன் என்றார். விஜய் முடியாது என்று மறுத்தார். ஒரு கட்டத்தில் சாரதா கெஞ்சி கேட்டதால் விஜய் ஒத்துக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சாரதா, அம்முவை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து விடுகிறார். அம்மு, கங்காவின் மகளை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இருவருமே ஜாலியாக விளையாடுகிறார்கள். காவிரியின் வாழ்க்கையை நினைத்து மொத்த குடும்பமே கவலை படுகிறது. இன்னொரு பக்கம் காவேரி, அம்மு ஸ்கூலுக்கு வராத விஷயத்தை பிரின்ஸ்பல் இடம் சொல்கிறார். பிரின்ஸ்பல் விஜய்க்கு போன் செய்து விசாரிக்கிறார். விஜய், இனிமேல் அம்மு வரமாட்டாள். நான் வேறு ஸ்கூல் சேர்த்த போகிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் காவிரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதற்குப்பின் நிவின், சாரதா இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை கார்த்திக் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். அங்கு சாரதா, காவிரிக்கு கொஞ்ச நாளாக உடல்நிலை சரியில்லை. விபத்துக்கு பிறகு அவள் ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறாள். அவளைப் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும். அதற்காகத்தான் உண்மையை சொல்லி விடுகிறேன். அவளை வைத்து வாழுவது ரொம்பவே கஷ்டம். இதை நான் ஏற்கனவே உங்கள் பையனிடம் சொல்லிவிட்டேன். இருந்தாலும் உங்களிடம் உண்மையை சொல்கிறேன் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்று விடுகிறார். இதனால் மாப்பிள்ளையின் அம்மா அப்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.






