விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் தாத்தா சோமு, காவிரி மறந்து போன விஷயத்தையும் பாட்டி சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் விஜய் நொறுங்கிப் போனார். பின் கோபத்தில் விஜய், எதற்காக இப்படி செய்தீர்கள்? நீங்கள் சொன்னதை நம்பி நானும் என் பொண்ணும் காவிரியை பிரிந்து இருக்கிறோம் என்று எமோஷன் ஆக பேசி அழுதார். அப்போது அன்பரசு, காவிரிக்கு உன் ஞாபகமும் குழந்தை ஞாபகம் இல்லை என்றார்.

விஜய், தாத்தா-சித்தி- சித்தப்பா மூவர் மீதும் பயங்கரமாக கோபப்பட்டார். இனிமேல் என்னை பற்றியும் என் குழந்தை பற்றியும் நீங்கள் எந்த கவலையும் பட தேவையில்லை. எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இதனால் விஜய் தாத்தா ரொம்ப எமோஷனலாக ஃபீல் பண்ணினார். பின் பள்ளிக்கூடத்தில் அம்முவை அழைத்துக் கொண்டு விஜய் வந்தார். அப்போ அம்மு, கிளாஸ் மிஸ் இல்லாமல் ஸ்கூல் போகவே விருப்பமில்லை என்றார்.
மகாநதி:
விஜய், சீக்கிரமாகவே உன் கிளாஸ் மிஸ் வந்துவிடுவார் கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார்.
அதற்குப் பின் வீட்டிற்கு வந்த விஜய், தன் மகளுக்கும் தனக்கும் தேவையான எல்லா வேலைகளையும் செய்தார். தன் சித்தி உதவி செய்ய வந்ததற்குமே விஜய் திட்டி அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் காவிரியை சந்திக்க அவர் வீட்டின் வெளியே விஜய் காத்து கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆட்டோவில் இருந்து வந்து இறங்குகிறார். காவிரியை பார்த்தவுடன் விஜய் எமோஷனலாக அழுதார். காவிரி வீட்டிற்குள் சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், காவிரியிடம் பேசப் போகிறார். காவிரியை பார்த்தவுடன் விஜய் ரொம்பவே எமோஷனல் ஆக இருக்கிறார். சாரதா ஷாக் இருக்கிறார். விஜய் பார்த்தவுடன் காவேரி, நீங்கள் அம்மு அப்பா தானே, அம்மு எப்படி இருக்கிறார்? என்று விசாரிக்கிறார். விஜய் தான் தன்னுடைய கணவர் என்ற ஞாபகம் காவிரிக்கு வரவில்லை. விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. பின் விஜய் உண்மையை சொல்ல வரும்போது சாரதா தடுத்து நிறுத்தி திட்டி அனுப்பி விடுகிறார். பின் விஜயை தனியாக சந்தித்த சாரதா,
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா? உங்கள் வீட்டில் நீங்க உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லி என்னிடமிருந்து என் பேத்தியை பிரித்து விட்டார்கள்.

சீரியல் ட்ராக்:
காவிரிக்கும் பழைய ஞாபகம் இல்லை. என் பேத்தியை பார்க்காமல் ரொம்பவே தவித்து போய் இருக்கிறேன் என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். பின் விஜய், என்னிடம் காவிரி இறந்து விட்டதாக சொன்னார்கள். என் மகளுக்காக தான் இத்தனை வருடங்களாக நான் வாழ்ந்து வந்தேன் என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். பின் இருவருமே பாட்டி- தாத்தா செய்த துரோகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






