விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, உங்கள் மனைவி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?என்ன ஆனது? என்றெல்லாம் விசாரித்தார். விஜய், என்னுடைய மனைவி இறந்துவிட்டதாக நினைத்தேன். ஆனால், அவர் உயிரோடுதான் இருக்கிறார். சூழ்நிலை காரணமாக தான் நாங்கள் பிரிந்திருக்கிறோம் என்றார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு பின் தூக்கத்தில் அம்மு பயந்து போய் கத்தி அழுதார். காவிரி அவருக்கு ஆறுதலாக இருந்தார். அம்மு, நான் உங்களுடனே இருக்கிறேன். என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றார். காவிரியும் சரி என்றார். இதை எல்லாம் பார்த்து விஜய் எமோஷனலாக அழுதார்.

தாத்தா, விஜய் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தாத்தா, தான் செய்த தவறை உணர்ந்து விஜய் இடம் மன்னிப்பு கேட்டார். விஜய், தன் தாத்தா பக்கம் இருக்கும் நியாய தரப்பை புரிந்து கொண்டார். அதற்குப்பின் ராகவ் இறந்து போனதால் இந்த கேசையே போலீஸ் முடிக்கும் விஷயத்தை விஜய் தெரிந்து கொண்டார். இன்னொரு பக்கம் ரூமில் காவேரி-அம்மு இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து விஜய்க்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
மகாநதி:
மறுநாள் காலையில் காவிரி, விஜய், தாத்தா எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, எனக்கு உங்கள் எல்லோரையும் எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றுகிறது. அது ஏன் தான் தெரியவில்லை என்றார். தாத்தா சோமு, அது பூர்விக ஜென்ம பந்தமாக இருக்கும் என்று சமாளித்தார். அதற்குப் பின் காவிரி, விஜய் இருவரும் காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, விஜயின் மனைவியைப் பற்றி கேட்டார். விஜய் தங்களுடைய திருமணத்தை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், தங்களுடைய திருமணம் கதையை எல்லாத்தையும் சொல்கிறார். உடனே காவிரி, நீங்கள் சொன்னதை எல்லாம் நான் எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது என்கிறார். விஜய், சீக்கிரமாகவே உனக்கு பழைய ஞாபகம் வரும் காவேரி என்று மனதுக்குள் சொல்லி சந்தோஷப்படுகிறார். பின் காவிரி, உங்களுடைய மனைவி எங்கே இருக்கிறார்? அவருடைய போன் நம்பர் குடுங்க. நான் பேசி உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்கிறார். ஆனால், விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் காவிரியை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு விஜய் செல்கிறார். வீட்டிற்கு வந்த காவிரி, விஜயின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். சாரதாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் காவிரியும் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுவதால் தயாராகிறார். இன்னொரு பக்கம் தாத்தா சோமு, அன்பரசு, சித்தி எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தாத்தா, விஜய்- காவிரி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும். காவிரிக்கு பழைய ஞாபகம் வரவில்லை என்றாலும் நாமே திருமண ஏற்பாடு செய்து இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்கிறார். அன்பரசு, தாத்தாவின் முடிவுக்கு சம்மதம் சொல்கிறார்.






