விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை தனக்கு தெரிந்த டாக்டரிடம் காண்பித்தார். அவர் சீக்கிரமாகவே காவிரியை குணப்படுத்திவிடலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். மறுநாள் அம்மு, விஜய் இருவரும் காவிரியின் வீட்டிற்கு வந்தார்கள். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் அம்மா இப்படி நடந்து கொள்கிறார்? என்று சந்தேகப்பட்டார். பின் விஜய், அம்முவிற்கு சாரதா தடைபடலாக சமைக்க சென்றார்.

விஜய், சாரதா உடன் சேர்ந்து சமையல் செய்தார். இதை எல்லாம் பார்த்து காவிரிக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் இதைப் பற்றி காவிரி, கங்கா- யமுனாவிற்கு ஃபோன் செய்து சொன்னார். அவர்களாலும் எதுவும் பேச முடியவில்லை. காவிரிக்கு விஜய் மீது பயங்கர கோபம் வருகிறது. இருந்தும் அமைதியாக அடக்கிக் கொண்டார். பின் காவிரி, விஜய், அம்மு மூவருமே சாப்பிட்டார்கள். அப்போது விஜய், என் வீட்டிற்கும் நீங்கள் டின்னருக்கு வரவேண்டும் என்று அழைத்தார்.
மகாநதி:
காவிரி வேண்டாம் என்று சொல்வதற்குள் சாரதா ஒத்துக் கொண்டார். விஜய் கிளம்பியவுடன் சாரதாவிடம் காவேரி, எதற்காக அந்த ஆள் இந்த வீட்டிற்கு வரவேண்டும். நீங்கள் எதற்கு அவர்கள் வீட்டிற்கு போகணும். அவர்கள் வீட்டு ஆட்களை பற்றி எதற்கு கேட்கிறீர்கள்? நான் அவர் வீட்டிற்கு வர மாட்டேன் என்றெல்லாம் சண்டை போட்டார். சாரதாவால் எதுவுமே பேச முடியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, காவிரி- விஜய்- அம்மு மூவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை கங்கா, யமுனாவிற்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் எல்லோருமே போட்டோ பார்த்து ரொம்ப சந்தோஷம். பின் சாரதா, காவிரியின் பிறந்தநாள் வருவதால் நீங்கள் எல்லோருமே வீட்டிற்கு வாருங்கள் விஜய்யும் வர சொல்லி இருக்கிறேன் என்கிறார். கங்கா- யமுனா இருவரும் சரி என்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜய், காவிரியை வீட்டிற்கு அழைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். தாத்தாவிற்கு காவிரி வருவதில் சந்தோஷம்.
சீரியல் ட்ராக்:
அன்பரசு, காவிரி இல்லாமல் நீயும் குழந்தையும் சந்தோஷமாக இல்லையா? இனிமேல் எதற்கு காவிரியுடன் சேர்க்க பார்க்கிறாய் என்று கேட்கிறார். கோபத்தில் விஜய், தன்னுடைய சித்தப்பாவை திட்டி விடுகிறார். அதற்குப்பின் காவிரி ஸ்கூலுக்கு தயாராகி வருகிறார். அப்போது விஜய்-அம்மு இருவரும் வருகிறார்கள். விஜய், காவேரி இடம் ரொம்ப பாசமாக பேசுகிறார். கோபத்தில் காவிரி, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். என்னிடம் ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றெல்லாம் திட்டி விட்டு செல்கிறார்.






