விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கோவிலில் காவேரி, விஜயிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டார். பின் அம்முவை சந்திக்க காவிரி வீட்டிற்கு போனார். அப்போது விஜயின் சித்தி ராதா, எதற்காக இங்கே வந்தாய் என்று கடுமையாக நடந்து கொண்டார். பின் தாத்தா, ராதாவை திட்டி காவிரியை உள்ளே போக சொன்னார். காவேரி- அம்மு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அம்மு, நீங்கள் என் அப்பாவை கல்யாணம் செய்துகொண்டு என்னுடனே இருங்கள் என்று எமோஷனாக பேசினார். அதை விஜய் கேட்டு விட்டார்.

காவேரி குழந்தையிடம் பேசியதை பார்த்து விஜய் சண்டை போட்டார். பின் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி அங்கிருந்து காவிரி கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு காவிரி வராததால் சாரதா ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். காவிரியின் சகோதரிகள் எல்லோருமே ஆறுதல் சொல்லியும் சாரதா கேட்கவில்லை. நிவினிடம் நடந்ததை சொன்னார். நிவின், விஜயிடம் காவிரி வராததை சொன்னார். பின் நிவின்- விஜய் இருவருமே காவிரியை தேடி அலைகிறார்கள். எங்குமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் காவிரி ரோட்டில் நடந்து வருவதை விஜய் பார்த்து விட்டார்.
மகாநதி:
நிவின், காவிரியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். சாரதா ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார். காவிரி, என்னுடைய விருப்பத்தை யாருமே புரிந்து கொள்ளவில்லையே? என்று கத்தினார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே காவிரியின் விருப்பத்திற்கு சம்மதம் சொல்லி விட்டார்கள். இன்னொரு பக்கம் நிவின்- காவிரி வீட்டில் நடந்ததை விஜய் இடம் சொன்னார். விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன். காவிரி என்னை விட்டுப் போக மாட்டாள் என்று நம்பிக்கையுடன் பேசி இருந்தார். அதற்குப்பின் மாப்பிள்ளை வீட்டிலிருந்து காவிரியை பார்க்க வந்திருந்தார்கள். காவிரி மட்டும் சந்தோசமாக இருந்தார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அம்மு இரண்டு நாட்களாக பள்ளிக்கு வராததால் காவேரி நேரடியாக விஜய் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அம்முவை பார்த்து காவேரி விசாரிக்கிறார். அம்மு, அப்பா வேணாம் என்று சொன்னதால்தான் பள்ளிக்கு வரவில்லை என்று உண்மையை சொல்கிறார். காவிரி, எதற்காக இப்படி செய்கிறீர்கள்? நான் டீச்சர் என்ற முறையில் தான் கேட்கிறேன் என்கிறார். விஜய், நான் அம்முவை வேறு ஸ்கூலில் சேர்க்கப் போகிறேன். நீங்கள் அம்முவைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் பட தேவையில்லை என்கிறார். விஜய் பேசியது காவிரிக்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குப்பின் காவிரியை திருமணம் செய்து கொள்ள போகும் கார்த்திக், திருமண ஏற்பாடுகளை பற்றி எல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
காவிரி சந்தோஷமாக திருமணத்தை பற்றி பேசுகிறார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவிரி, விஜய் சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதை கேட்டு சாரதா-கங்கா ஷாக் ஆகிறார்கள். கங்கா, அவர் என்ன வேனாலும் செய்து கொள்ளட்டும். நீ எதற்கு கவலைப்படுகிறாய் உன்னுடைய வேலையை பார் என்று சொல்கிறார். இருந்தாலும் காவிரிக்கு கஷ்டமாகவே இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய், காவிரியுடன் இருக்கும் புகைப்படத்தை எல்லாம் பார்த்து வேதனைப்படுகிறார். இதை கவனித்த அம்மு, விஜய் இல்லாத நேரம் பார்த்து புகைப்படத்தை எடுக்கப் போகிறார். அதற்குள் வந்த விஜய், அம்முவை கடுமையாக திட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.






