விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்க்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. அதற்குப்பின் ஆபீஸில் விஜய், கிருஷ்ணாவுடைய சர்டிபிகேட்டை பற்றி எல்லாம் கேட்டார். கிருஷ்ணா, கத்தாரில் இருக்கிறது இங்கு இல்லை என்று சமாளித்தார். பின் விஜய், சாஃப்ட் காபி இருந்தாலும் போதும் அனுப்பிவிடு என்று சொன்னவுடன் கிருஷ்ணா சரி என்றார். பின் ராகவ்க்கு போன் செய்த கிருஷ்ணா, விஜய்க்கு என் மீது சந்தேகம் வந்து சர்டிபிகேட் கேட்டார் என்று நடந்ததை சொன்னார். ராகவ், எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். பயப்படாதே என்றார்.

ராகவ் - கிருஷ்ணா இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராகவ், நாங்கள் என்ன சொன்னோம், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய். சீக்கிரம் வேலையை முடிக்க முடியாதா? என்றார். கிருஷ்ணா, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. விஜய்க்கு என் மீது சந்தேகம் வந்துவிட்டது. துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்றார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை விஜய் பார்த்து கூப்பிட்டார். பின் விஜய் பார்த்தவுடன் கிருஷ்ணா-ராகவ் இருவரும் சாக்கானார்கள். விஜய், இருவரையும் பிடித்து வெளுத்து வாங்கினார். இருந்தாலும் இருவரும் தப்பித்து விட்டார்கள்.
மகாநதி:
பின் வீட்டிற்கு வந்த விஜய், எல்லோரும் பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தார். அதற்குப்பின் நிவினிடம் விஜய் நடந்தது எல்லாம் சொன்னார். நிவின், எப்படியாவது இந்த கும்பலை பிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அப்போது வந்த காவிரி, கிருஷ்ணாவால் வேலை ஒழுங்காக நடக்கவில்லை. அதை கவனியுங்கள் என்றார். விஜய், உண்மையை சொல்லாமல் சரி என்றார். அதற்குப்பின்
கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அங்கிருந்து கிளம்ப சொன்னார். முத்துமலர், சிந்து இருவரும் வீட்டை விட்டு கிளம்புவதை நிவின்- விஜய் இருவரும் ஒளிந்து கொண்டு பார்த்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து மலர்- சிந்து இருவரையும் பின் தொடர்ந்து விஜய்-நிவின் செல்கிறார்கள். பின் முத்துமலர், கிருஷ்ணா, சிந்து மூவரும் காரில் தப்பிக்க பார்க்கிறார்கள். உடனே விஜய்-நிவின் தடுத்து நிறுத்தி கையும் களவுமாக பிடித்து விடுகிறார்கள். அப்போது விஜய், கிருஷ்ணாவை அடித்து உண்மையைக் கேட்கிறார். முத்து மலர், உங்கள் மாமனருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் பசுபதி சொல்லித்தான் இப்படி நடித்தோம் என்று உண்மையை சொல்லி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதைக் கேட்ட விஜய்- நிவின் இருவரும் சாக்காகிறார்கள். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து கிருஷ்ணா, ராகவுடன் பேசியது எல்லாம் விஜய்-நிவின் சொல்கிறார்கள். பின் முத்து மலர் குடும்பத்தை அழைத்து வந்து உண்மையை சொல்ல சொல்கிறார் விஜய். அப்போது முத்துமலர், நான் சந்தானத்தின் இரண்டாவது மனைவி என்று சொன்னதெல்லாம் பொய்தான். பசுபதி சொல்லி தான் நாங்கள் நடிக்க வந்தோம் என்று சொல்கிறார். இதைக்கேட்டு சாரதா அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






