விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், உனக்கு இருக்கும் வலி வேறு அவர்களுக்கு இருக்கும் வலி வேறு புரிந்துக்கொள் என்று அறிவுரை சொன்னார். அதற்கு பின் விஜய், கங்கா, காவிரி மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய்யின் பாட்டி, தாத்தா, சித்தி மூவருமே காவேரி குடும்பம் செய்யும் வேலையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது வந்த விஜய், காவிரியின் நிலைமைக்காக அமைதியாக இருங்கள். சீக்கிரமாகவே இந்த பிரச்சினை முடித்து விடுகிறேன் என்றார்.

சாரதா கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த முத்துமலர், நான் உதவி செய்யட்டுமா அக்கா? அவருக்கு நல்லெண்ணெய் அதிகமாக ஊத்தி சமைத்தால் தான் பிடிக்கும் என்றெல்லாம் சந்தானத்தை பற்றி எல்லாம் தெரிந்தது போல பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டு சாரதாவிற்கு பயங்கர கோபம் வந்தது. கோபத்தில் சாரதா சண்டை போட்டார். உடனே காவேரி, தன்னுடைய அம்மாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றார்.
மகாநதி:
அதற்குப்பின் ஒரு செட்ரூமில் முத்துமலர், சிந்து இருப்பதை பார்த்த விஜய், இவர்களை எதற்கு இங்க தங்க வைத்தீர்கள்? கெஸ்ட் ரூமில் தங்க வையுங்கள். எல்லா ஏற்பாடும் செய்து கொடுங்கள். யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனுப்பி வைத்தார். அதற்குப்பின் காவிரி, கால் வலிக்கிறது என்று சொல்வதால் விஜய் கால் அமுக்கி விட்டார். பின் இருவருமே தங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, முத்தமலர் சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து பார்த்து தன்னுடைய மாமியாரிடம் புலம்பி வேதனை பட்டுக்கொண்டிருக்கிறார். கங்காவுமே, குமரன் நம்மிடம் உண்மையை சொல்லவில்லையே என்றும் வேதனைப்படுகிறார். பின் குமரனும் வெளிநாட்டில் இருப்பதால் அதேபோல் தவறு செய்து விடுவாரோ என்ற பயத்திலேயே இரவு முழுவதும் தூங்காமல் புலம்பி கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் கங்கா கவலையில் இருப்பதை அறிந்த விஜய் அவரிடம் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது கங்கா, குமரனும் அந்த தவறு செய்திருப்பாரோ என்று கவலையாக இருக்கிறது என்கிறார். அதற்கு விஜய், நீங்கள் என் மீது கூட சந்தேகப்படலாம். ஆனால், அவர் மீது சந்தேகப்பட தேவையில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகமா இருந்தால் அவரிடமே நேரடியாக போன் செய்து கேட்க வேண்டியதானே என்று சொல்கிறார். விஜய் பேசியதற்கு பிறகு கங்கா கொஞ்சம் தெளிவாக இருக்கிறார் அதற்குப்பின் விஜய், காவிரி இருவரும் வாக்கிங் போகிறார்கள். அப்போது தன்னுடைய குடும்பத்தை பற்றியும் குழந்தையைப் பற்றியும் காவிரி பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






