விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து கொண்டு சந்தானத்தின் நினைவுகளை நினைத்து எல்லோருமே வருத்தப்பட்டு அழுதார்கள். அந்த சமயம் வந்த காவேரி, தீபாவளி பண்டிகைக்கு தன்னுடைய வீட்டிற்கு அழைத்தார். ஆனால், கங்கா எதுவுமே சொல்லவில்லை. அதற்கு பின் விஜய்- காவிரி இருவருமே தீபாவளி பண்டிகை பற்றியும் தங்களுடைய குழந்தை பற்றியும் ரொம்ப சந்தோஷமாக பேசிக்கொண்டு போனார்கள். இன்னொரு பக்கம் நர்மதா, காவிரி வீட்டிற்கு செல்வதை பற்றி கேட்டார். ஆனால் கங்கா, அங்கெல்லாம் தேவையில்லை. என்னால் வர முடியாது. நான் இங்கே தான் இருப்பேன் என்றார்.

கங்கா, எல்லார் வீட்டிலும் தான் தீபாவளி இருக்கிறது. நான் காவிரி வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று பிடிவாதம் ஆக இருந்தார். அந்த சமயம் நிவின்- யமுனா இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது யமுனா, காவிரி வீட்டிற்கு தீபாவளி கொண்டாட போகலாம் என்றார். ஆனால், கங்கா முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எடுத்து சொல்லியுமே கங்கா கேட்கவில்லை. அதற்குப்பின் கங்காவை தனியாக அழைத்து சென்ற யமுனா ஏதோ பேசி சம்மதிக்க வைத்தார். வீட்டில் எல்லோருமே காவிரி வீட்டிற்கு வந்து விட்டார்கள். பட்டாசு, வான வேடிக்கை கொண்டாட்டம் என்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
மகாநதி:
அப்போது நர்மதா தவறுதலாக மத்தாப்பு கம்பியை கங்காவின் கை மேல் பட்டுவிட்டது. இதனால் கங்கா ஒரே அலப்பறை செய்தார். ஆனால், அவருக்கு கையில் பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை. இருந்தாலும் கங்கா வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார். இதை புரிந்து கொண்ட விஜய், ஹாஸ்பிட்டல் போகலாம் என்று சொன்னவுடன் கங்கா ஒன்றும் இல்லை என்று சமாளித்து விட்டார். மறுநாள் காலையில் எல்லோருமே தீபாவளிக்காக தயாராகி வந்தார்கள். மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் கங்கா மட்டும் கோபமாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோருமே சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். பின் விஜய், நீங்கள் கொடைக்கானல் வீட்டை விற்பதாக இருந்தால் நானே வாங்கிக் கொள்கிறேன். காவிரி பெயரில் எழுதிக் கொடுங்கள். மார்க்கெட்டில் என்ன தொகை போகிறதோ அதே வாங்கிக் கொள்கிறேன். நான் குறைவாக எல்லாம் கேட்க மாட்டேன். வெளியில் வீட்டை விற்பதற்கு காவிரிக்கு விருப்பமே இல்லை. உங்களுக்கு பண தேவை என்பதால் நானே வாங்கிக் கொள்கிறேன். அந்த வீடு காவிரி பெயரில் இருந்தாலுமே உங்கள் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
நீங்கள் எல்லோருமே அங்கு போகலாம், வரலாம் என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டவுடன் சாரதா சந்தோஷப்படுகிறார். ஆனால், கங்கா-யமுனாவிற்கு விருப்பமே கிடையாது. கங்கா அதெல்லாம் முடியாது என்று சொல்லி விடுகிறார். அதற்குப்பின் சாரதா, காவிரி பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு கங்கா, அதெல்லாம் முடியாது. அது அவர் பெயரில் கொடுத்தால் நமக்கு எப்படி உரிமை கொண்டாட முடியும் என்கிறார். பின் சாரதா, யாரோ எடுத்துச் செல்வதற்கு காவிரி பெயரில் இருந்தால் நம்முடைய வீடு நம்மிடமே இருக்கும். எதற்கு அவள் மீது இவ்வளவு பொறாமைப்படுகிறீர்கள் என்றெல்லாம் திட்டுகிறார். இருந்தாலுமே கங்கா- யமுனா கேட்கவில்லை. இருவருமே பிடிவாதமாக இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






