விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, விஜய்- அம்மு இருவருக்குமே பார்த்து பார்த்து சாப்பாட்டை பரிமாறினார். அம்மு கட்டாயப்படுத்தியதால் தான் காவிரியும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அதற்கு பின் விஜய், காவிரியின் மெடிக்கல் ரிப்பீட்டை கொடுங்கள். எனக்கு தெரிந்த டாக்டரிடம் பேசுகிறேன் என்று சொல்வதால் சாரதாவும் கொடுத்தார். அதற்குப்பின் காவிரியை கோயிலுக்கு அழைத்து செல்ல சொல்லி சாரதா கேட்டார். விஜயும் சரி என்றார். காவிரி அழகாக புடவையில் வந்தார். அதை பார்த்து விஜய் மெய் மறந்து இருந்தார்.

பின் காவேரி, அம்மு, விஜய் மூவரும் ஒன்றாக காரில் சேர்ந்து செல்வதை பார்த்து சாரதா சந்தோஷப்பட்டார்.
விஜய், காவிரியை கோவிலில் விட்டு காத்திருப்பதாக சொன்னார். காவிரி, அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. நானே வீட்டிற்கு போகிறேன் என்றார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த காவிரி, எதற்காக அவருடன் அனுப்பி வைக்கிறீர்கள்? எனக்கு அதில் விருப்பமே கிடையாது என்று தன் அம்மாவை திட்டினார். அதற்குப்பின் சாரதா, கங்கா- யமுனாவிற்கு போன் செய்து விஜய் உயிருடன் இருக்கும் விஷயத்தை சொன்னார். எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.
மகாநதி:
அதற்குப் பின் விஜய், காவிரியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை தனக்கு தெரிந்த டாக்டரிடம் காண்பித்தார். அவர் சீக்கிரமாகவே காவிரியை குணப்படுத்திவிடலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். மறுநாள் அம்மு, விஜய் இருவரும் காவிரியின் வீட்டிற்கு வந்தார்கள். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் அம்மா இப்படி நடந்து கொள்கிறார்? என்று சந்தேகப்பட்டார். பின் விஜய், அம்முவிற்கு சாரதா தடைபடலாக சமைக்க சென்றார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் விஜய், சாரதா உடன் சேர்ந்து சமையல் செய்கிறார். இதை எல்லாம் பார்த்து காவிரிக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் இதைப் பற்றி காவிரி, கங்கா- யமுனாவிற்கு ஃபோன் செய்து சொல்கிறார். அவர்களாலும் எதுவும் பேச முடியவில்லை. காவிரிக்கு விஜய் மீது பயங்கர கோபம் வருகிறது. இருந்தும் அமைதியாக அடக்கிக் கொள்கிறார். பின் காவிரி, விஜய், அம்மு மூவருமே சாப்பிடுகிறார்கள். அப்போது விஜய், என் வீட்டிற்கும் நீங்கள் டின்னருக்கு வரவேண்டும் என்று அழைக்கிறார்.

சீரியல் ட்ராக்:
காவிரி வேண்டாம் என்று சொல்வதற்குள் சாரதா ஒத்துக் கொள்கிறார். விஜய் கிளம்பியவுடன் சாரதாவிடம் காவேரி, எதற்காக அந்த ஆள் இந்த வீட்டிற்கு வரவேண்டும். நீங்கள் எதற்கு அவர்கள் வீட்டிற்கு போகணும். அவர்கள் வீட்டு ஆட்களை பற்றி எதற்கு கேட்கிறீர்கள்? நான் அவர் வீட்டிற்கு வர மாட்டேன் என்றெல்லாம் சண்டை போடுகிறார். சாரதாவால் எதுவுமே பேச முடியவில்லை.






