விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா, இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். விஜயிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று மீண்டும் சதி செய்ய திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் குமரனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விஜய்-நிவின் இருவருமே கவலைப்பட்டார்கள். அதற்கு நிவின், நான் உடனே அங்கு சென்று என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து சொல்கிறேன். நீங்கள் இங்கிருக்கும் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். விஜய்யும் நிவின் சொல்வதை ஏற்றுக் கொண்டார்.

ஏழாவது மாதம் செக்கப்பிற்காக விஜய்- காவேரி இருவரும் ஹாஸ்பிடலுக்கு செல்ல தயாராகி கிளம்பினார்கள். அப்போது பாட்டி, கங்காவும் உங்களுடன் வருகிறாரா? பிரசவத்திற்கு அவன் அப்பா வருவானா? நீதான் எல்லாமே செய்யணுமா? என்றார். இதை கேட்டு சாரதா ரொம்பவே வருத்தப்பட்டார். பின் விஜய், சாரதாவை சமாதானம் செய்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். முதலில் காவிரிக்கு செக்கப் செய்தார்கள். குழந்தையை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் கங்காவிற்கு செக் அப் செய்தார்கள். ஆனால், குமரன் தன்னுடன் இல்லாதது நினைத்து கங்கா ரொம்பவே வருத்தப்பட்டார்.
மகாநதி:
இன்னொரு பக்கம் விஜய்யின் ஆபீஸில் கஸ்டமர்கால் எல்லோருமே தங்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை செய்து முடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். பின் விஜய்- காவேரி இருவரும் நேரடியாக ஆபீசுக்கு வந்தார்கள். அங்கு கஸ்டமர்கள் பயங்கரமாக கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அப்போது கஸ்டமர் கோபமாக நடந்தது எல்லாம் சொன்னார். இதை கேட்டு விஜய்- காவிரி இருவரும் ஷாக் ஆனார்கள். ஓரமாக நின்று சித்தப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வேலையை முடித்து தராததால் கஸ்டமர்கள் எல்லோருமே கொந்தளித்து விஜய் ஆபீசில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஜய்- காவிரி இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. பின் தன்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்களிடம் விஜய், என்ன நடக்கிறது என்று கேட்கிறார். அப்போது அவர்கள், இதை தான் நாங்கள் ரொம்ப நாட்களாக சொல்லலாம் என்று இருந்தோம். ஆனால், உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை காரணமாக சொல்ல முடியவில்லை. உங்களுடைய சித்தப்பாவிடம் சொன்னோம் என்கிறார். உடனே சித்தப்பா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் விஜய், எல்லோரிடமும் டைம் வாங்குகிறார். ஆனால், யாரும் கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:
காவேரி, என்னால் தான் உங்களுக்கு இந்த பிரச்சனை என்று ரொம்ப வருத்தப்பட்டு பேசினார். விஜய் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் கஸ்டமர் எல்லோருமே பேட்டியில் விஜய் கம்பெனியை பற்றி ரொம்ப மோசமாக பேசுகிறார்கள். இதை டிவியில் பார்த்த தாத்தா, பாட்டி இருவரும் ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். பின் பாட்டி, விஜய் இடம் பேசி பிரச்சினையை பார்க்க சொல்லுங்க என்றெல்லாம் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் நர்மதா, முத்துமலர் குடும்பம் இருக்கும் இடத்திற்கு சென்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பசுபதி ஏமாற்றிய வேலை எல்லாம் நர்மதா சொல்கிறார். இதைக் கேட்டு கிருஷ்ணா, சிந்து எல்லோரும் வருத்தப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






