விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வீட்டில் கங்கா, தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். பின் சாரதா வீட்டில் எல்லோருமே காவேரியின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். விஜய் அவர்களை கவனித்தார். அதை எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் தான் வந்தது. பின் காவேரி ரூமில் தயாராகிக் கொண்டிருந்தார். அதை பார்த்து யமுனா, கங்கா இருவரும் முறைத்துக் கொண்டிருந்தார்கள். பின் யமுனா, எனக்கும் மேக்கப் போடணும் என்று சொன்னவுடன் காவேரி போட சொன்னார்.

காவிரிக்கு பூச்சூடல் விழா நடைபெறுகிறது. விஜய், காவிரியின் காவிரியின் அழகில் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். காவிரி- விஜய் இருவருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து கங்கா, யமுனாவிற்கு கடுப்பானது. பின் நல்லபடியாக விழா முடிந்து விட்டது. அதற்குப்பின் கங்கா, யமுனா இருவருமே கொடைக்கானல் வீட்டை விற்பதை பற்றி பேசி இருந்தார்கள். காவிரி ஒத்துக் கொள்ளவே இல்லை. பின் கங்கா- யமுனா இருவருமே எங்களுக்கு பணம் தேவை.
மகாநதி:
கண்டிப்பாக வீட்டை விற்க தான் போகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். அந்த சமயப் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் கூப்பிட்டதால் காவிரியால் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வந்து விட்டார். அதற்குப்பின் காவிரி, தாத்தா, விஜய் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டை விற்பதை பற்றி காவிரி சொன்னார். அதற்கு விஜய் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது தாத்தா, நீ அந்த வீட்டை வாங்கிக்கொள் என்று சொன்னார். விஜய் நல்ல ஐடியா என்று யோசித்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தாத்தா, அந்த வீட்டை விற்க விற்பதாக இருந்தால் நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு விஜய், இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கிறது. நாமே வாங்கிக் கொள்ளலாம் என்றார். ஆனால், காவிரிக்கு தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. கங்கா, யமுனா என்ன சொல்வார்கள்? வீட்டை நானே வாங்கிக் கொண்டால் பிரச்சனை வருமா? என்றெல்லாம் யோசித்தார். அதற்கு விஜய் ஒன்றும் இல்லை என்றெல்லாம் சமாதானம் செய்தார். மறுநாள் ஆபீஸ்க்கு காவிரி, விஜய் இருவருமே கிளம்பினார்கள். இன்னொரு பக்கம் சாரதா, தீபாவளி பலகாரம் செய்து கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து கொண்டு சந்தானத்தின் நினைவுகளை நினைத்து எல்லோருமே வருத்தப்பட்டு அழுகிறார்கள். அந்த சமயம் வந்த காவேரி, தீபாவளி பண்டிகைக்கு தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால், கங்கா எதுவுமே சொல்லவில்லை. அதற்கு பின் விஜய்- காவிரி இருவருமே தீபாவளி பண்டிகை பற்றியும் தங்களுடைய குழந்தை பற்றியும் ரொம்ப சந்தோஷமாக பேசிக்கொண்டு போகிறார்கள். இன்னொரு பக்கம் நர்மதா, காவிரி வீட்டிற்கு செல்வதை பற்றி கேட்கிறார். ஆனால் கங்கா, அங்கெல்லாம் தேவையில்லை. என்னால் வர முடியாது. நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






