விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, காவிரிக்கும் பழைய ஞாபகம் இல்லை. என் பேத்தியை பார்க்காமல் ரொம்பவே தவித்து போய் இருக்கிறேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பின் விஜய், என்னிடம் காவிரி இறந்து விட்டதாக சொன்னார்கள். என் மகளுக்காக தான் இத்தனை வருடங்களாக நான் வாழ்ந்து வந்தேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பின் இருவருமே பாட்டி- தாத்தா செய்த துரோகத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

விஜய், நான் கண் விழித்த உடனே காவிரியை தான் கேட்டேன். காவிரி இறந்ததாக சொல்லி என்னையும் என் குழந்தையையும் தவிக்க விட்டார்கள் என்றார். சாரதா, நாங்கள் காஞ்சிபுரம் வந்த பிறகு உங்களுடைய சித்தப்பா, சித்தியை பார்த்தோம். அப்போது நீங்கள் இறந்து விட்டதாகவும் குழந்தை தாத்தாவிடம் வெளிநாட்டில் வளர்வதாகவும் சொன்னார்கள். அதனால்தான் நான் எதுவும் பேசவில்லை என்றார். விஜய், நான் காவிரியை பார்க்க முடியுமா? என்று கேட்கிறார். சாரதா, விஜய்யை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்.
மகாநதி:
காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. சாரதா, அவருடைய பொண்ணு அம்மு நீ பள்ளிக்கூடத்திற்கு வராததால் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தார். உன்னை பார்க்க வேண்டும் என்று அம்மு ஆசைப்படுகிறார். அதனால் அவர் மகளை அழைத்து வருவதற்கு நான் சம்மதம் சொல்லிவிட்டேன் என்றார். விஜய்யும் தன் மகளை அழைத்துக் கொண்டு வர சென்று இருந்தார். காவிரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தன் கனவில் வந்தவர் நிஜத்தில் வருவது எப்படி என்று காவிரி யோசித்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் தாத்தா, விஜய்யிடம் ரொம்ப எமோஷனலாக பேசி மன்னிப்பு கேட்கிறார். விஜய், காவிரியை நான் பார்த்தேன். ஆனால், அவளுக்கு பழைய ஞாபகம் இல்லை என்று சொல்கிறார். பின் விஜய், அம்முவை தயாராக சொல்கிறார். இன்னொரு பக்கம் சாரதா தடபுடலாக விருந்து சமைத்துக் கொண்டிருக்கிறார். காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் விஜய்- அம்மு இருவரும் காவிரி வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். காவிரியை பார்த்தவுடன் அம்மு ரொம்ப சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்து சாரதா-விஜய் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=a0BT88uT_bI
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் பிரோமோவில் விஜய்- அம்மு இருவரும் காவிரியின் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். சாரதா தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்து விஜய், காவேரி, அம்மு மூவரையும் சாப்பிட வைக்கிறார். அதற்குப்பின் சாரதா, காவிரியை கோயிலுக்கு அழைத்து போக சொல்லி விஜய்யிடம் கேட்கிறார். பின் காவிரியும் தயாராகி வருகிறார். காவிரியை பார்த்து விஜய் மெய்மறந்து இருக்கிறார்.






