விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியை கிண்டல் செய்ததற்காக விஜய் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பினார். காவிரியும் அதை பார்த்து இருந்தார். ஆனால், எதுவுமே ரிப்ளை செய்யவில்லை. அதற்குப்பின் காவிரி, விஜய்க்கு பார்த்த பெண்ணிடம் பேசி சம்மதம் வாங்கி கொண்டார். மறுநாள் காலையில் விஜய், காவிரியிடம் மன்னிப்பு கேட்பதற்காக வீடு முழுவதுமே பலூனில் சாரி என்று எழுதி வைத்திருந்தார். அப்போது வெளியே வந்த காவிரி ரொம்ப மோசமாக விஜய் இடம் பேசி வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. சாரதா வருத்தப்பட்டார்.

சாரதா, எதற்காக விஜயிடம் அப்படி பேசினாய்? என்று கேட்டார். கோபத்தில் காவிரி, நான் ஏதாவது சொல்லிடப் போகிறேன். நீயும் அந்த ஆளும் சேர்ந்து என்னென்ன வேலை பண்ணினீர்கள் என்று எனக்கு தெரியும். கார்த்திக் எனக்கு போன் செய்து சொல்லிவிட்டான். என்னைப் பற்றி ரொம்ப மோசமாக ரெண்டு பேரும் சேர்ந்து கார்த்தி இடம் சொல்லி இருக்கிறீர்கள். நீ எல்லாம் ஒரு பெத்த தாயா? என்று பயங்கரமாக கொந்தளித்தார். அதோடு சாரதாவை திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொன்னார் காவிரி.
மகாநதி:
உடைந்துபோன சாரதா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் காவிரி, பள்ளிக்கு கிளம்பி சென்று விட்டார். இன்னொரு பக்கம் காவிரி சொன்னதை எல்லாம் நினைத்து விஜய் ரொம்பவே வருத்தப்பட்டார்.
அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் ஒரு விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பிள்ளைகள் அம்மாவுடன் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். இதை கேட்டு அம்மு ரொம்பவே வருத்தப்பட்டார். தனக்கு அம்மா இல்லாததால் அம்மு எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதை எல்லாம் கவனித்த காவிரி ரொம்பவே வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற விஜய் இடம் காவிரி பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி எமோஷனாக அழுகிறார் சாரதா. விஜயுமே சாரதாவிற்கு ஆறுதல் சொல்கிறார். பின் விஜய், காவிரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறார். அதற்குப் பிறகு விஜய் தன்னுடைய வீட்டிற்கு போகிறார். அப்போது விஜய்யை ஏற்கனவே பார்த்து சென்ற பெண்ணுடைய பெற்றோர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு ம்மதமா என்று கேட்கிறார்கள். விஜய் ஏதேதோ சொல்லி சமாளித்து அவர்களை அனுப்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் காவிரி செய்த வேலை எல்லாம் தன்னுடைய தாத்தாவிடம் சொல்லி புலம்புகிறார் விஜய். அதற்குப்பின் பள்ளிக்கூடத்தில் விஜய், இனிமேல் நான் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அதேபோல் நீங்கள் எனக்கு எந்த பெண்ணையும் பார்க்க தேவையில்லை. உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்கிறார். காவிரியும் எதுவும் பேசாமல் வீட்டிற்கு போகிறார். அங்கு சாரதா இல்லை. காவிரி, தன்னுடைய சகோதரிகளிடம் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் வீடு முழுக்க தன் அம்மாவை தேடுகிறார் காவிரி. ஆனால், எங்கேயுமே சாரதா இல்லை. இதனால் காவேரி ரொம்பவே பயப்படுகிறார்.






