விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அன்பரசு, காவிரி இல்லாமல் நீயும் குழந்தையும் சந்தோஷமாக இல்லையா? இனிமேல் எதற்கு காவிரியுடன் சேர்க்க பார்க்கிறாய் என்று கேட்டார். கோபத்தில் விஜய், தன்னுடைய சித்தப்பாவை திட்டி விட்டார். அதற்குப்பின் காவிரி ஸ்கூலுக்கு தயாராகி வந்தார். அப்போது விஜய்-அம்மு இருவரும் வந்தார்கள். விஜய், காவேரி இடம் ரொம்ப பாசமாக பேசி இருந்தார். கோபத்தில் காவிரி, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். என்னிடம் ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றெல்லாம் திட்டி விட்டு சென்றார்.

சாரதா, விஜயின் வீட்டிற்கு போவதால் நிறைய பலகாரம் செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து காவிரிக்கு கடுப்பாகிறது. எதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று தன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். சாரதா ஏதேதோ சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம் விஜய், காவேரி வீட்டிற்கு வருவதால் யாரையும் சமைக்க விடாமல் தன் கையாலே விதவிதமாக சமைத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்து தாத்தாவிற்கு சந்தோசம்.
மகாநதி:
சித்தப்பா அன்பரசு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. காவிரியால் விஜயின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது என்றார். தாத்தா, காவிரி இருந்தால் தான் விஜய் சந்தோஷமாக இருப்பான். அவன் விருப்பப்படி நடக்கட்டும். எதுவும் சொல்ல வேண்டாம் என்றார். அதற்குப்பின் சாரதா- காவிரி இருவரும் விஜயின் வீட்டிற்கு வந்தார்கள். விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். பின் விஜய் தன்னுடைய தாத்தா சித்தி, சித்தப்பாவை எல்லாம் காவிரிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அம்மு தன்னுடைய வீட்டை சுற்றி காண்பிப்பதற்காக காவிரி அழைத்து செல்கிறார். பின் அம்மு தங்களுடைய ரூமை பற்றி சொல்கிறார். காவிரியும் சந்தோஷப்படுகிறார். அங்கு ரூமில் காவிரியின் உடைய பழைய பொருட்களை எல்லாம் அம்மு காண்பிக்கிறார். அதை பார்த்து காவிரிக்கு ஞாபகம் வருமா? என்று விஜய் பார்க்கிறார். ஆனால் காவிரிக்கு எந்த ஞாபகமே வரவில்லை. காவிரி, எதற்காக இந்த பொருளை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். விஜய், என் மனைவியின் ஞாபகம் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று எமோஷனலாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சாரதாவிடம் விஜயின் தாத்தா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். சாரதாவும் பழைய விஷயத்தை மறந்துவிடலாம் என்று சொல்கிறார். பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள். விஜய், காவிரிக்கு பிடித்த பலகாரத்தை செய்து கொடுக்கிறார். இருந்தும் காவிரிக்கு பழைய ஞாபகங்கள் எதுவுமே வரவில்லை. சித்தப்பா, உண்மையை சொல்லாமல் காவிரியின் குடும்பத்தை முறைத்துக் கொண்டு இருக்கிறார்.






