விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சீக்கிரமாகவே உன் கிளாஸ் மிஸ் வந்துவிடுவார் கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். அதற்குப் பின் வீட்டிற்கு வந்த விஜய், தன் மகளுக்கும் தனக்கும் தேவையான எல்லா வேலைகளையும் செய்தார். தன் சித்தி உதவி செய்ய வந்ததற்குமே விஜய் திட்டி அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் காவிரியை சந்திக்க அவர் வீட்டின் வெளியே விஜய் காத்து கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆட்டோவில் இருந்து வந்து இறங்குகிறார். காவிரியை பார்த்தவுடன் விஜய் எமோஷனலாக அழுதார். காவிரி வீட்டிற்குள் சென்றார்.

விஜய், காவிரியிடம் பேசப் போகிறார். காவிரியை பார்த்தவுடன் விஜய் ரொம்பவே எமோஷனல் ஆக இருந்தார். சாரதா ஷாக் இருந்தார். விஜய் பார்த்தவுடன் காவேரி, நீங்கள் அம்மு அப்பா தானே, அம்மு எப்படி இருக்கிறார்? என்று விசாரித்தார். விஜய் தான் தன்னுடைய கணவர் என்ற ஞாபகம் காவிரிக்கு வரவில்லை. விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. பின் விஜய் உண்மையை சொல்ல வரும்போது சாரதா தடுத்து நிறுத்தி திட்டி அனுப்பி விட்டார். பின் விஜயை தனியாக சந்தித்த சாரதா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா? உங்கள் வீட்டில் நீங்க உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லி என்னிடமிருந்து என் பேத்தியை பிரித்து விட்டார்கள்.
மகாநதி:
காவிரிக்கும் பழைய ஞாபகம் இல்லை. என் பேத்தியை பார்க்காமல் ரொம்பவே தவித்து போய் இருக்கிறேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பின் விஜய், என்னிடம் காவிரி இறந்து விட்டதாக சொன்னார்கள். என் மகளுக்காக தான் இத்தனை வருடங்களாக நான் வாழ்ந்து வந்தேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பின் இருவருமே பாட்டி- தாத்தா செய்த துரோகத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், நான் கண் விழித்த உடனே காவிரியை தான் கேட்டேன். காவிரி இறந்ததாக சொல்லி என்னையும் என் குழந்தையையும் தவிக்க விட்டார்கள் என்கிறார். சாரதா, நாங்கள் காஞ்சிபுரம் வந்த பிறகு உங்களுடைய சித்தப்பா, சித்தியை பார்த்தோம். அப்போது நீங்கள் இறந்து விட்டதாகவும் குழந்தை தாத்தாவிடம் வெளிநாட்டில் வளர்வதாகவும் சொன்னார்கள். அதனால்தான் நான் எதுவும் பேசவில்லை என்றார். விஜய், நான் காவிரியை பார்க்க முடியுமா? என்று கேட்கிறார். சாரதா, விஜய்யை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்.

சீரியல் ட்ராக்:
காவிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. சாரதா, அவருடைய பொண்ணு அம்மு நீ பள்ளிக்கூடத்திற்கு வராததால் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தார். உன்னை பார்க்க வேண்டும் என்று அம்மு ஆசைப்படுகிறார். அதனால் அவர் மகளை அழைத்து வருவதற்கு நான் சம்மதம் சொல்லிவிட்டேன் என்கிறார். விஜய்யும் தன் மகளை அழைத்துக் கொண்டு வர சென்று இருக்கிறார். காவிரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தன் கனவில் வந்தவர் நிஜத்தில் வருவது எப்படி என்று காவிரி யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






