விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, தன்னுடைய பேத்தியை பற்றி விசாரித்தார். கோபத்தில் அன்பரசன், அவர் வெளிநாட்டில் இருந்தார். நீங்கள் எங்கள் குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என்று திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் அம்மு விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து அடிபட்டு விடுகிறது. இதனால் காவேரி அவருக்கு முதலில் உதவி செய்து பார்த்துக்கொண்டார். பின் விஜய்க்கு போன் செய்த காவேரி, அம்முக்கு அடிபட்ட விஷயத்தை சொன்னார். காவிரி வாய்சை கேட்டவுடன் விஜய் உறைந்து போனார். பின் அம்முவுக்கு அடிபட்டதால் பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.

விஜய், போனில் பேசியது காவிரி குரல் மாறியே இருந்தது. எனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது? என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்திற்கு வந்து விட்டார். ஆனால், அங்கு காவிரி இல்லை. பின் அம்முவை பார்த்து விஜய் விசாரித்தார். அதற்குப்பின் விஜய், டாக்டருக்கு போன் செய்து வீடியோ காலில் அம்முவின் காலை காண்பித்தார். விஜய் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது காவிரி கிராஸ் பண்ணி போனார். ஆனால், அதை விஜய் கவனிக்கவில்லை. பின் வீட்டிற்கு வந்த விஜய், அம்முவை தூங்க வைத்துவிட்டு மருந்து வாங்க கடைக்கு சென்றார்.
மகாநதி:
அப்போது அந்த வீடியோ காலில் டாக்டர் சொன்ன மருந்து எல்லாம் விஜய் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது காவிரி செல்வதை பார்த்து விஜய் சாக்கானார். உடனே விஜய், ஸ்கூலுக்கு ஓடி போனார். ஆனால், டீச்சர் யாரும் அங்கு இல்லை. இன்னொரு பக்கம் யமுனாவிற்கு அடிபட்டு இருப்பதால் சாரதா- காவிரி இருவரும் விசாரித்தார்கள். பின் யமுனாவை பார்க்க இருவருமே கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் விஜய், அம்முவிடம் அவருடைய கிளாஸ் டீச்சர் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை காண்பித்தார். அம்மு, இவர்தான் என்னுடைய டீச்சர் என்றார். ஷாக் ஆன விஜய் குழப்பத்திலேயே இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்தால் எல்லா சந்தேகமும் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார். பின் மறுநாள் காலையில் அம்முவை விஜய் ஸ்கூலுக்கு அழைத்து செல்கிறார். ஆனால், அங்கு காவேரிக்கு பதில் வேறொரு டீச்சர் இருக்கிறார். அதை பார்த்த அம்மு, இவர் என்னுடைய கிளாஸ் மிஸ் இல்லை என்று சொல்லி உள்ளே செல்கிறார். விஜய், பிரின்சிபிலை சந்தித்து காவிரியின் வீட்டு அட்ரஸை கேட்கிறார். ஆரம்பத்தில் அவர் தர மறுத்தாலும் பின் விஜய் கெஞ்சி கேட்டதால் தந்து விடுகிறார்கள். பின் அந்த அட்ரசுக்கு விஜய் போகிறார்.

சீரியல் ட்ராக்:
அங்கு வீடு பூட்டு போட்டு இருக்கிறது. பக்கத்தில் இருந்தவர்களிடம் விஜய் விசாரிக்க, இருவரும் வெளியே போய் இருப்பதாக சொல்கிறார்கள். பின் விஜய், காவேரியின் புகைப்படத்தை காண்பித்து கேட்கிறார். அதற்கு அவர்களும் ஆமாம் என்கிறார்கள். இதனால் விஜய் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் யமுனாவை பார்க்க சாரதா, காவிரி இருவரும் பார்க்கப் போகிறார்கள். பின் யமுனாவை பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் அங்கேயே தங்குகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த விஜய், காவிரியை பற்றி தாத்தாவிடம் கேட்கிறார். அவர் ஷாக் ஆகி நிற்கிறார்.






