விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார். உடனே கல்யாணி அழுது டிராமா செய்தார். சித்தப்பா, காவிரி இறந்து விட்டாள் என்று சொன்னார். இதைக் கேட்ட விஜய் உடைந்து போய் கதறி அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்க்கு ஆறுதல் சொன்னார்கள். பின் சித்தி, குழந்தையை கொண்டு வந்து விஜய் இடம் கொடுத்தார். குழந்தையை பார்த்து விஜய் எமோஷனலாக அழுதார். 5 வருடங்களுக்கு பிறகு காண்பிக்கிறார்கள்.

விஜய் தன்னுடைய மகளுக்கு காவிரி என்று பெயரும் வைத்திருக்கிறார். குழந்தை காவிரியின் ஐந்தாவது பிறந்தநாள் என்பதால் வீட்டில் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். விஜய்யின் தாத்தா வந்தவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதற்கு பின் கோவிலுக்கு விஜய், தாத்தா, குழந்தை காவிரி எல்லோருமே போனார்கள். இன்னொரு பக்கம் காவேரி தன்னுடைய அக்கா மகளுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். கங்கா, குமரனுடன் கொடைக்கானலில் சொந்தமாக கடை நடத்தி வாழ்ந்து வந்தார்.
மகாநதி:
கங்கா குழந்தையை அழைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு போனார். அந்த சமயம் வந்த யமுனா கலெக்டர் தேர்வில் பாஸ் ஆனதால் போஸ்டிங் கிடைத்ததாக சொல்லி சந்தோஷப்பட்டார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோவிலில் குழந்தை காவிரியின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார் விஜய். அப்போது தாத்தா, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கல்யாணி இறந்துவிட்டார். விஜய் தன் மனைவி இறந்ததால் பிசினஸை விட்டு காஞ்சிபுரத்துக்கே வந்து குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி, எனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு பெரிய பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார். இதைக் கேட்டு யமுனா, சாரதா எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். காவிரி, நாம் காஞ்சிபுரத்திற்கு சென்று விடலாம் என்று சொல்கிறார். முதலில் தயங்கினாலும் எல்லோரும் சொன்னதால் சாரதா ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் விஜயின் மகள், எனக்கு அம்மாவை பார்க்க வேண்டும். அழைத்து கொண்டு போகிறீர்களா என்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
விஜய்யால் எதுவுமே பேச முடியவில்லை எமோஷனலாக கண் கலங்குகிறார். விஜய், சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்கிறார். அதற்குப் பின் விஜய், காவிரியின் போட்டோவை பார்த்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காவேரி, தனக்கு புது வேலை கிடைத்ததால் சந்தோஷமாக இருக்கிறார். அடுத்த நாள் காலையில் விஜய் தன்னுடைய மகளை புது ஸ்கூலில் சேர்ப்பதற்கு குழந்தை காவிரியை ரெடி பண்ணுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






