கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பல்வேறு பிரபலமான நடிகர்களில் நடிகர் மற்றும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் மேலும் இவரை நடிகை யாஷிகா ஒரு தலையாகவும் காதலித்து வந்தார்.
ஆனால், மஹத் ஏற்கனவே பிராட்சி மிஸ்ரா என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். அப்படி இருந்தும் யாஷிகாவிற்கும், மஹத்திற்கும் காதல் உருவானது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் அடிக்கடி மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனால் மஹதின் காதலி காட்சி காதலை முறித்துக் கொண்டதாக பலரும் கூறி வந்தனர்.
இதையும் படியுங்க : வாக்களிக்க முடியாமல் போன சிவகார்த்திகேயன்.! காரணத்தை கேட்டால் அதிர்ச்சி ஆவீங்க.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது மஹத்திற்கும் யாஷிகா விற்கும் காதல் மலர்ந்தது இதனால் மனமுடைந்த பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஹத்திற்கும் தனக்கும் உண்டான காதல் முறிந்து விட்டதாக பதிவிட்டு இருந்தார். ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த பதிவினை நீக்கிவிட்டார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மஹத் எப்படியோ பிராச்சியை சமாதானம் செய்து விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் மஹத்தும் யாஷிகாவும் பழகி வந்தனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்து வருகின்றனர். இந்த நிலையில் முகத்திற்கும் அவரது காதலியான பிராச்சிக்கும் நேற்று (ஏப்ரல் 17) திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.