வாக்களிக்க முடியாமல் போன சிவகார்த்திகேயன்.! காரணத்தை கேட்டால் அதிர்ச்சி ஆவீங்க.!

0
596
Sivakarthikeyan

2019 ஆம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

திரையுலகில் பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று பல்வேறு முக்கிய நடிகர்களும் காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை அளித்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் தொகுதியில் வாக்களிப்பதாக இருந்தது ஆனால், இதுவரை அவர் வாக்களிக்க வரவில்லை.

இதையும் பாருங்க : மும்பையில் இருந்து வந்த ரஜினி, வரிசியில் நின்று வாக்களித்த விஜய்.! வீடியோ இதோ.! 

- Advertisement -

விசாரித்ததில் சிவகார்திகேன் பெயர் மட்டும் இல்லை பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் பெயர் கூட வாக்கு பட்டியலில் இல்லயாம். சிவகார்த்திகேயனின் பெயர் வாக்கு பட்டியலில் இல்லை என்றாலும் அவர் அனைவரும் வாக்களியுங்கள் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு ஹீரோவுக்கே ஓட்டு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று ட்வீட் செய்த சிவகார்த்திகேயனால் இன்று வாக்களிக்க முடியாமல் போய்விட்டது கொஞ்சம் பாவம் தான்.

-விளம்பரம்-

Advertisement