‘உங்கள் மறைவு கொண்டாடப்படுகிறது’ – தந்தையின் இறப்பிற்கு பின் மகேஷ் பாபு போட்ட முதல் உருக்கமான பதிவு.

0
122
maheshbabu
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்ற மகேஷ் பாபுவின் தந்தையும் நடுவருமான கிருஷ்ணா காலமாகி இருக்கும் சம்பவம் மகேஷ் பாபு குடும்பத்தையும் தெலுங்கு திரையுலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் இளம் வயதில் தன்னுடைய தந்தை திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், 1979 ல் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான மகேஷ் பாபு தற்போது தெலுங்கு சினிமா துறையில் பிரின்ஸ் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு வருகிறார். இவரது படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் தான். இதனாலே இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து இருந்தார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது.

- Advertisement -

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தவர். தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்ற முதல் நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 ஆம் ஆண்டு வரை இவர் திரைபடங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுபவிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மாரடைப்பு காரணமாக எவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது மேலும் அவரது உடல்நிலை மோசமானதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. அவருக்கு வயது 80. கிருஷ்ணாவின் இழப்பு தெலுங்கு சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த ஜனவரி 8ஆம் தேதி தான் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு காலமாகி இருந்தார். அண்ணன் இறந்த சோகத்தில் இருந்து வந்த மகேஷ் பாபுவிற்கு அடுத்த துயரமாக அவரது தாயாரின் மரணம் பெரும் சோகத்தில் தள்ளி இருந்தது. அண்ணன் இறந்த 7 மாதத்தில் மகேஷ் பாபுவை அடுத்த சோகம் சூழ்ந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மகேஷ்பாபுவின் தாயார் உடல் நலக்குறைவால் காலமாக இருந்தார். இப்படி ஒரு நிலையில் தாயார் இறந்த இரண்டு மாதத்தில் தனது தந்தையும் இறந்து விட்டதால் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார் மகேஷ் பாபு.

இந்த நிலையில் தன் தந்தை குறித்து மகேஷ் பாபு உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘”உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவு இன்னும் அதிகமாக கொண்டாடப்படுகிறது. அதுதான் உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சல் தான் உங்கள் இயல்பு. எனது இன்ஸ்பிரேஷன், எனது தைரியம், எனக்கு முக்கியமானவை என நான் நினைத்த அனைத்தும் உங்களோடு போய்விட்டன. ஆனால் வினோதமாக, இதுவரை நான் உணராத இந்த வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமற்றவன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்கள் லெகசியை முன்னெடுத்துச் செல்வேன். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ நானா.. மை சூப்பர் ஸ்டார்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் மகேஷ் பாபு.’

Advertisement