தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘யுவராஜு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானர் இந்த இளம் நடிகை.
இவர் தமிழ் சினிமாவில் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு தான். இளம் வாலிபர்களின் படத்தில் அறிமுகமான இந்த நடிகை அந்த படத்திற்கு பின்னர் அந்த நடிகருடன் இரண்டு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில பிரபலமான நடிகர்களுடன் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.! பிரஸ் மீட்டில் கூறிய பிக் பாஸ் சீசன் 2 நடிகை.! விளங்கிடும்டா.!
அவ்வளவு ஏன் இவர் லேடி சூப்பர் ஸ்டார் நடித்த படத்திலும் இரண்டாம் ஹீரோயினாக கூட நடித்துள்ளார். இறுதியாக அந்த குவாட்டர் நடிகருடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அம்மணிக்கு தமிழும் சரி, தெலுங்கிலும் சரி எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் குடும்பப்பாங்கான லுக் தான். மேலும், அம்மணி கிளாமர் ரோலுக்கு எல்லாம் ஓகே சொல்வதே இல்லை. அதே போல தற்போதும் சின்னப்பெண் போல இருப்பதால் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறாராம் இந்த இளம் நடிகை.