உங்களுக்கு நடிப்பே வரல, உங்க Fansனு சொல்றவங்க எல்லாம் உங்க ஹாட் போட்டோ ஷூட்ட பாத்து வந்தவங்க தான் – ரசிகர் கமென்டிற்கு மாளவிகா பதிலடி.

0
530
malavika
- Advertisement -

மாறன் படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சி குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு மாளவிகா அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள மொழியில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித்இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படம் மூலம் தான் இந்தியில் அறிமுகமாகி இருந்தார். பின் கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பிறகு இவர் தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கி இருந்தார். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார் மாளவிகா. அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : குஷி படத்திற்கு பின் நான் மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவே இல்லை – அதுக்கு காரணம் இதான். எஸ் ஜே சூர்யா சொன்ன Practical உண்மை.

- Advertisement -

மாஸ்டர் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சேதுபதி, ஸ்ரீமன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. தற்போது இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து இருந்த தனுஷின் மாறன் படத்தில் மாளவிகா நடித்து இருந்தார். கார்த்திக் நரேன் எழுதி, இயக்கி இருந்தார்.

மாறன் படம்:

இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் பேனரில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மாபெரும் தோல்வியை அடுத்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட கேள்வி:

ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரில்ஸ் வீடியோ என்று ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஒவருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.

பதில் டீவ்ட் போட்ட மாளவிகா :

அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனிடம் உங்களுக்கும் தெரியும் மற்ற அனைவருக்கும் தெரியுமா நீங்கள் ஒரு மோசமான நடிகை என்று. உங்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் சமூக வலைதளத்தில் உங்களின் ஹாட் போட்டோ ஷூட் மூலம் கவரப்பட்டவர்கள் தான் என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த மாளவிகா ‘அப்போ நீங்களும் என் போட்டோ ஷூட்டை பார்த்து எனக்கு ரசிகராகி என்னை ட்விட்டரில் பாலோ செய்கிறீர்களா’ என்று கேள்வியை கேட்டுள்ளார்.

Advertisement