குஷி படத்திற்கு பின் நான் மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவே இல்லை – அதுக்கு காரணம் இதான். எஸ் ஜே சூர்யா சொன்ன Practical உண்மை.

0
377
sjsurya
- Advertisement -

மற்ற நடிகர்களை இயக்கி படம் இயக்குவது குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்து இருந்த பழைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிகராகவதற்கு முன்பு மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அஜித்தை வைத்து இயக்கிய வாலி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி இவர் படங்களின் மூலம் தான் பல முன்னணி நடிகர்களின் வாழ்க்கையே உச்சத்திற்கு மாறியது என்று சொல்லலாம். அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : ‘ஆமா, இது அதில்ல’ – பத்தல பத்தல பாடல் இந்த வடிவேலு காமெடியின் காபியா ? இதோ வீடியோ.

- Advertisement -

எஸ்.ஜே.சூர்யா திரைப்பயணம்:

இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே இவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இதனிடையே இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படமும் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு படத்தில் எஸ். ஜே. சூர்யா நடித்து இருந்தார்.

டான் திரைப்படம்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. பல போராட்டங்கள், பிரச்சனைகளை கடந்து தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி:

இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் எஸ் ஜே சூர்யா அவர்கள் அளித்து இருந்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் இயக்கம் குறித்து கூறியிருப்பது, நான் விஜய்யின் குஷி படம் பிறகு எந்த ஒரு தமிழ்நாட்டு ஹீரோவை வைத்து படம் பண்ண வில்லை.

படம் இயக்கம் குறித்து சொன்னது:

2000க்கு பிறகு நான் எந்த தமிழ்நாடு தமிழ்நாடு ஹீரோவையும் வைத்து படமே எடுக்க வில்லை. பெரிய தயாரிப்பாளர்கள் தங்களின் பிள்ளைகளை வைத்து படம் எடுத்து தோல்வி அடைந்து விட்டது என்றால் கவலை பட மாட்டார்கள். நாம் நடித்த படம் தோல்வியுற்றால் யார் காசு போடுவது? அதனால் ஒரு படம் இயக்கி அதில் வரும் காசை வைத்து தான் நடிக்க ஆரம்பித்தேன். நான் இதுவரை இயக்கிய படங்கள் எல்லாம் டாப் நடிகர்களை வைத்துதான் இயக்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement