3 மாசம் கர்ப்பமா இருந்தேன், அதான் அந்த பாட்ல சரியா நடனம் ஆடல – விஜய் பட நடிகை சொன்ன காரணம்.

0
1944
- Advertisement -

தமிழ் சினிமாவின் உள்ள முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மாளவிகா இழந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவிகா. இவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். .அந்த படத்திற்கு பிறகு இவர் மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.

-விளம்பரம்-

சினிமாவில் அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர். இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜித்துடன் நடித்த பின்னர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல படங்களில் நடித்து இருந்தார் மாளவிகா.

- Advertisement -

மாளவிகா திரைப்பயணம்:

மேலும், ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு ஆப்படித்து துரத்தி விட்டது. அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போகவே ஒரு சில படங்களில் துணை நடிகையாகும், ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார் அம்மணி. பின்னர் டான்ஸராகவும் வாய்ப்புகளும் சரியாக அமையாமல் போனது.

மாளவிகா திருமணம்:

இதை அடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மாளவிகா. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மேலும், மாளவிகா திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார். கடைசியாக இவர் 2009 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார். இந்நிலையில் மாளவிகா அவர்கள் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பை இழந்த காரணம்:

அதாவது மாளவிகா அவர்கள் கடைசியாக நடித்த படம் குருவி. இந்த படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார், ஆனால், அதில் இவர் நன்றாக நடனமாடவில்லை. அதற்கு காரணம் அந்த சமயத்தில் இவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார். அதனாலேயே அந்த பாடலில் இவருடைய நடனமும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அதற்குப்பின் இவர் வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

குருவி படம்:

தற்போது வரை இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். ஒரு வேளை இந்த படத்தில் மாணவிகாவின் நடனம் ஹிட்டாகி இருந்தால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் வரும் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வந்த படங்களில் ஒன்று தான் குருவி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement