கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
1640
- Advertisement -

ஹாலிவுட்டிலேயே பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஹாலிவுட்டில் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஓபன்ஹெய்மர் . இந்த படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படம் அணுகுண்டின் தந்தை டாக்டர் ஓபன்ஹெய்மரின் பயோபிக் படமாக உருவாகி உள்ளது.

-விளம்பரம்-

முதலாம் உலகப்பர் முடிவுக்கு வந்த பிறகு அதே தலைமுறை மக்கள் இரண்டாம் உலகப் போரை சந்தித்தார்கள். அதற்குப் பின்னர் எந்த தலைமுறையும் உலகப்போரை சந்திக்கவில்லை. மேலும், இந்த உலகப் போர் வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இந்த இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நடந்த சம்பவம் தான். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் பியர்ஸ் ஹார்பர் துறைமுகத்தில் ஜப்பானின் போர் விமானங்கள் அக்கிராமத்தை ஆக்கிரமித்து இருந்தது.

- Advertisement -

இதனால் அமெரிக்கா கோவப்பட்டு அணுகுண்டுகளை கையில் ஏந்தி வீசியது. அப்போது ஹிரோஷிமா, நாகசாகி என ஜப்பான் நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டது. அதனுடைய விளைவு இன்றைக்கும் வடுவாக இருக்கின்றது. மேலும், இந்த நாசமான அணுகுண்டுகளின் தலைவர் ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர். இவர் உருவாக்கிய அணுகுண்டுகளால் தான் இந்த போர் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இரண்டாவது உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா உடைய காலில் ஜப்பான் விழுந்ததால் தான் இந்த இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.இன்றைக்கும் உலக நாடுகள் அணு ஆயுதங்களை முன்வைத்து அச்சுறுத்தினாலும் அதனை பயன்படுத்தும் துணிவு யாருக்கும் இல்லை. அதற்கு காரணம் இரண்டாம் உலகப்போரில் நடந்த விளைவுகள் தான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் தான்.

-விளம்பரம்-

இவரை கதையின் நாயகனாக கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவர் எப்படி சுவாரசியத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திருக்கிறது. பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இந்த படம் தயாராகி இருக்கிறது. அதோடு துளியும் கிராபிக்ஸ் கலக்காமல் தத்ரூபமாக இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

மேலும், 100 நாட்கள் கழித்து இந்த படத்தை ஓடிடிக்கு வரும் என்று கூறப்படுகிறது. படத்தின் கதை மெதுவாக நடக்கிறது. ஆனால், மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடினாலும் எவ்வளவு நேரம் போனது என்று தெரியாத அளவிற்கு படத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படத்தில் ஓபனிங்கில் ஓப்பன்ஹெய்மர் மாணவப் பருவத்தில் இருந்து கலிபோர்னவில் பேராசிரியராக இருந்த காலம், அதற்குப்பின் அவர் அணு ஆயுதங்களை உருவாக்கும் அமெரிக்க அரசின் திட்டத்தில் இணைந்தது, இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது என அனைத்தையும் தெளிவாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார். இந்த படம் உலக அளவில் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement