உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமான நடிகை ஆஷா சரத். அதன் பின்னர் கமலஹாசன் நடித்த தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார். மேலும், மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் இவர் தன்னுடைய வெள்ளித்திரை வாழக்கையை சின்னத்திரையில் இருந்து தான் துவங்கினார்.
பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டாம் என பல நடனக்கலையை அறிந்த இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான ஃப்ரைடே என்ற திரைப்படத்தின் மூலம் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். இவர் இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் சேர்த்த படம் என்றால் அது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் உடன் இணைத்து நடித்த படம் தான்.
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படம் இவரின் திரை வாழக்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. இப்படம் வெற்றியடையவே தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு கதாநாயகன் கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்திருந்தார். இந்த பதிலும் நடிகை ஆஷா சரத் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின.
இப்படி வெள்ளித்திரையில் மிகவும் பிசியாக நடித்து வந்த நடிகை ஆஷா சரத் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளிலும், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடுவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் ஆஷா சரத் டி.வி.சரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உத்தரா சரத் மற்றும் கீர்த்தனா சரத் என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் உத்தரா சரத் மலையாள சினிமாவில் “கெத்தா” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இந்நிலையில் தான் ஆஷா சரத் மகள் உத்தராவுக்கு தற்போது திருமணம் நடந்திருக்கிறது. உத்தரா பட்டய கணக்காளராக பணிபுரிந்து வரும் ஆதித்யா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது.
இவர்களது திருமணத்திற்கு மலையாள சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மற்றும் நடிகர் மோகன்லால் போன்றவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் உத்தரா அவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.