விஜய் எல்லாம் ஒரு நடிகர் கிடையாது.! மலையாள நடிகர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்.!

0
1224
Hareesh-Peradi

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவரது ரசிகர்கள் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல மலையாள வில்லன் சித்திக், நடிகர் விஜய் ஒரு சிறந்த நடிகர் இல்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Image result for actor siddique

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், அனைத்து திரையுலகத்திலும் சூப்பர்ஸ்டாரை நம்பித்தான் அனைத்தும் இருக்கிறது. அதே போல மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி,மோகன்லால் போன்றவர்கள் இருப்பது சிறந்த திரைப்படங்களை எடுக்க உதவியாக இருக்கிறது. சொல்லப்போனால் ஒட்டுமொத்த சினிமா துறையும் இது போன்ற நடிகர்களை நம்பி தான் இயங்கி வருகிறது. அதேபோல துணை நடிகர்கள் கூட எந்த சூப்பர் ஸ்டார் நடிகர்களை நம்பித்தான் இருக்கின்றனர்.

இதையும் படியுங்க : சூப்பர் சிங்கரில் பாடி வரும் இஸ்லாம் பெண்ணை மோசமாக விமர்சித்த நபர்கள்.!

- Advertisement -

மலையாளத்தில் மம்முட்டி மோகன்லால் என்று மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் கதையே வேறு நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிறந்த நடிகர் கிடையாது.அவருக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து தான் அவரை காப்பாற்றி வருகிறது. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் கமலஹாசன் தான் சிறந்த நடிகர் என்று கூறியுள்ளார்.

Image result for actor siddique

ஆனால், சித்திக்கின் இந்த கருத்திற்கு பிரபல மலையாள நடிகரான ஹரிஷ் பதிலடி கொடுத்துள்ளார். மெர்சல் படத்தில் டாக்டராக நடித்த ஹரிஷ் விஜய் குறித்து பேசுகையில், விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் அதேபோல ஒரு சிறந்த நடிகரும் கூட, மற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களை போன்று இல்லாமல் நடிகர் விஜய் ஒரு சிறந்த மனிதரும் கூட என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement