7 ஆம் அறிவு பட நடிகையின் மகளுக்கு திருமணம். மாப்பிள்ளை இவர் தான் .

0
44755
urmila-unni
- Advertisement -

சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் பல பேருக்கு திருமணம் ஆகி வருகிறது. அந்த வகையில் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த ஊர்மிளா உன்னி அவர்களின் மகளுக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்று உள்ளது. தற்போது நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஊர்மிளா உன்னி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் படத்தில் நடித்து உள்ளார். இவர் மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் 50க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஊர்மிளா உன்னி அவர்கள் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் மற்றும் தாய் வேடங்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

நடிகை ஊர்மிளா உன்னி அவர்கள் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளி வந்த யான் என்ற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சோனியா அகர்வால் நடிப்பில் வந்த “ஒரு நடிகையின் வாக்குமூலம்” என்ற படத்தில் சோனியா அகர்வாலுக்கு அம்மாவாக ஊர்மிளா உன்னி நடித்து உள்ளார். மேலும், 7 ஆம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மரின் அம்மாவாக நடித்திருந்தார். நடிகை ஊர்மிளா உன்னி திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த கிளாசிக்கல் டான்ஸர் ஆவார். தற்போது நடிகை ஊர்மிளா உன்னி அவர்கள் டிவி சீரியல்களிலும் நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றும் வருகிறார்.

இதையும் பாருங்க : வெளியான நான்கே நாளில் தொலைக்காட்சியில் தர்பார். வைரலாகும் வீடியோ. படக்குழு அதிர்ச்சி.

- Advertisement -

இவருக்கு உத்தரா உன்னி என்ற ஒரு மகளும் உள்ளார். உத்ரா உன்னி அவர்கள் திரைப்பட நடிகையும், பரதநாட்டிய நடன கலைஞரும் ஆவார். மலையாளத்தில் ஊர்மிளாவின் மகள் உத்தரா உன்னி ‘இடவப்பாடி’ உள்ளிட்ட சில படத்தில் நடித்து உள்ளார். அரசு, கம்பீரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் இயக்கும் “வவ்வால் பசங்க” என்ற படத்தில் தான் நடிகை உத்ரா உன்னி கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். உத்ரா உன்னி அவர்கள் தன்னுடைய பரதநாட்டியக் கலையை பல்வேறு மேடைகளில் அரங்கேற்றும் செய்து உள்ளார். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் பல வெளிநாடுகளிலும் சென்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் இவர், யுனஸ்கோ இன்டர்நேஷனல் டான்ஸ் கவுன்சிலிங்கில் ஒருவராகவும் உள்ளார். இவர் கொச்சினில் டெம்பிள் ஸ்டெப்ஸ் என்ற ஒரு டான்ஸ் ஸ்கூலுலையும் நடத்தி வருகிறார். தற்போது நடிகை உத்தரா உன்னிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்று உள்ளது. இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா திரை உலகத்தில் உள்ள பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் அனைவரும் திருமணம் எப்போது என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement