நயன்தாரவின் இந்த சமீபத்திய செயலால் கடுப்பில் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள். காரணம் இது தான்.

0
32093
nayanthara

மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகை நயன்தாரா ஒரு பொது விழாவில் தோன்றியுள்ளது தான் தற்போது சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ குழுமும் அதன் முதல் விருது விழாவை நடத்தியது மேலும், இந்த விருது வழங்கும் விழாவின் ஜூரிகளாக தமிழ் சினிமாவின் பிரபலங்களான சுஹாஷினி, மணிரத்னம்,கௌதம், வாசுதேவ் மேனன், பரத் பாலா, கரு பழனியப்பன் மற்றும் பரத்வாஜ் ரங்கன் போன்றவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த விழாவில் பல்வேறு கலைஞ்சர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த விழாவில் பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா மற்றும் பிரைட் ஆஃப் இந்திய இசைக்கான விருதுகள் கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதே போல இந்த விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை இயக்குனர், சிறந்த இயக்குனர், சிறந்த ஆசிரியர், சிறந்த துணை நடிகர் என பல விருதுகள் வழங்கப்பட்டன. கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதிலும் நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பலருக்கும் சர்பரைசா இருந்தது.

இதையும் பாருங்க : நான் இப்போது மறு ஜென்மம் எடுத்து உள்ளேன் – மெர்சல் பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிலை.

- Advertisement -

15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகை ஆளுகின்ற மிகச் சில பெண் நடிகர்களில் நயன்தாராவும் ஒருவர். இன்று, அவர் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், நடிகை நயன்தாராவை, லேடி அஜித் என்று அழைத்தாலும் அது பொருந்தும். அதற்க்கு முக்கிய காரணமே அஜித்தை போல நயன்தாரா, தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவிலோ, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்வது கிடையாது.

அவ்வளவு ஏன் நயன்தாரா இறுதியாக பெரிய நடிகர்களுடன் நடித்த விஸ்வாசம், பிகில், தர்பார் போன்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் நடந்த ஜீ சினி விருதுகள் விழாவில் கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில் இவருக்கு 2019 ஆம் ஆண்டின் பேவரைட் நடிகை விருதினையும், ஸ்ரீதேவி விருதினையும் வென்றார். விஜய், அஜித், ரஜினி என்று பெரிய நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நயன் தற்போது இதற்கு மட்டும் கலந்துகொள்கிறாரா என்று விஜய், அஜித், ரஜினி என்று பல்வேறு நடிகர்களின் ரசிங்கர்கள் நயன்தாராவை கடுமையாக தாக்கி ட்வீட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement