ஆங்கரிங் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன, வருமானத்தில் பிரியங்காவை மிஞ்சிய மணிமேகலை. ப்பா, மாசம் மட்டும் இவ்ளோவா ?

0
557
manimegalai
- Advertisement -

மணிமேகலை, பிரியங்கா தேஷ்பாண்டேவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கொரோனா லாக்டவுனில் நிறைய பேர் யூடியூப் சேனல் தொடங்கி காசு பார்த்து வருகிறார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினிகள் மணிமேகலை, பிரியங்காவும் தனியாக சேனலை தொடங்கி சம்பாதித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இவர்கள் பணியாற்றுவதை காட்டிலும் யூடியூபில் நிறைய வருமானத்தை பெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், 2019ஆம் ஆண்டு சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை தொடங்கியவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து மணிமேகலை தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இதனால் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

இதையும் பாருங்க : சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் – லிஸ்டில் கூட வராதா தல – தளபதி.

- Advertisement -

மணிமேகலை பற்றிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகிறார். தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதிலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மணிமேகலையின் சொத்து மதிப்பு:

தற்போது இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் என்று சொல்லலாம். அதோடு இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதோடு இதில் அவர் நன்றாக சம்பாதித்து வருகிறார். சொகுசு கார், பைக், HM லேண்ட் என்று ஒட்டுமொத்தமாக மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் $1 Million – $5 Million வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 7.82 கோடி முதல் 35 கோடி வரையாகும்.

-விளம்பரம்-

பிரியங்கா தேஷ்பாண்டே:

தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பிரியங்கா சொத்து மதிப்பு:

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் ப்ரியங்கா கலந்து கொண்டு மிகத் திறமையாக விளையாடி இருந்தார். தற்போது பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரும் யூடியூப் சேனலை வைத்து இருக்கிறார். ஆகவே, இவரது சொத்து மதிப்பு 1.16 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ 9 கோடியாகும். ஆனால், மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சொத்து மதிப்புகள் உண்மையிலேயே இத்தனை கோடிகளா? இல்லை வதந்தியா? என தெரியவில்லை.

Advertisement