சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் – லிஸ்டில் கூட வராதா தல – தளபதி.

0
340
vikram
- Advertisement -

சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வருடத்திற்கு 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை சந்தித்ததா என்பது கேள்விக்குறி தான். ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மிக பிரம்மாண்டமான வசூலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வைக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -
vikram

விக்ரம் படம்:

இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல் செய்து உள்ளது. வருகின்ற நாட்களிலும் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : கனா காணும் காலங்கள் தொடரில் மினி விஜய் சேதுபதி என்று பெயரெடுத்த வரும் பிரபலம் – அட, ஆமாப்பா அப்படியே இருக்காரு.

விக்ரம் படத்தின் வசூல்:

இது மட்டுமில்லாமல் கமலின் திரை பயணத்திலேயே ஒரு திருப்புமுனையாக விக்ரம் படம் அமைந்திருக்கிறது. அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் இந்த படம் இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது. தமிழகத்தில் மட்டுமே விக்ரம் திரைப்படம் சுமார் 130 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் சென்னை ஏரியாவில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் குறித்த பட்டியல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

எந்திரன் 2.O:

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் எந்திரன் 2.O. இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படம் சென்னையில் மட்டும் 24.65 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

bahubali

பாகுபலி:

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படம் சென்னையில் மட்டும் 18.85 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

Petta

பேட்ட:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிகுமார் உள்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் சென்னையில் மட்டும் 15.68 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

தர்பார்:

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் சென்னையில் மட்டும் 15.18 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது.

darbar

விக்ரம்:

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விக்ரம். இந்த படம் தற்போது வரை சென்னையில் மட்டும் 15.08 கோடிகள் வசூல் செய்து இருக்கிறது. இனி வரும் காலங்களில் வசூல் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி முதல் ஐந்து இடத்தில் ரஜினி, பிரபாஸ், கமல் போன்றவர்களின் படங்கள் மட்டுமே ஆட்சி செய்து இருக்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜய், சூர்யா போன்றோர்களின் படங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement