மேடையிலேயே விஜய் ஆண்டனியிடம் தொகுப்பாளர் மணிமேகலை கதறி அழுது இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.
இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
மணிமேகலை குறித்த தகவல்:
அதோடு இரண்டு குடும்பத்தினரின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தங்களின் வாழ்க்கை துவங்கிய உசேன் மற்றும் மணிமேகலை படிப்படியாக முன்னேறி இன்று சொந்தமாக நிலம், கார், பைக் என்று சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியிருந்தார்கள். அதில் இவர்கள் பதிவிடும் எதார்த்தமான வீடியோக்கள் பார்வையாளர்களை கவர, இவர்களது யூடியூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
சின்னத்திரையில் மணிமேகலை:
அதோடு சின்னத்திரையில் பல ஆண்டுகளாக காணாமல் போன மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தான் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை இருந்தார். பின் நான்காவது சீசன் தொடங்கும் போது இவர் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது மணிமேகலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகிறார்கள்.
மணிமேகலை கதறி அழுத காரணம்:
இந்நிலையில் சமீபத்தில் தொகுப்பாளனி மணிமேகலை அவர்கள் விஜய் ஆண்டனியை பேட்டி எடுத்திருந்தார். அப்போது மணிமேகலை, எனக்கு சில மாதத்திற்கு முன்பு என்னுடைய காலில் சிறிய அடிபட்டது. அப்ப நடக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நான் பட்ட வேதனை என்னால் சொல்லவே முடியாது. அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது உங்களுடைய வீடியோ மற்றும் மோட்டிவேஷனல் ஸ்பீச் தான்.
விஜய் ஆண்டனி சொன்னது:
உங்களை பார்த்து நான் வியந்து விட்டேன். இப்போது நான் இங்கு இருப்பதற்கு காரணமும் நீங்கள் தான் சார் என்று கதறி அழுது இருக்கிறார். உடனே விஜய் ஆண்டனி மணிமேகலின் கையை பிடித்து, பல விஷயத்தை தாண்டி நம்முடைய வாழ்க்கை பயணம் என்பது கொசுவிட ரொம்ப சின்னதானது. ஒரு சின்ன புள்ளிதான் நம்மோட வாழ்க்கை. நம்முடைய கண்ணுக்கு இதுதான் உலகமே என்று பார்க்காமல் இந்த உலகில் ஒரு சிறு பகுதி தான் நம் வாழ்க்கை என்று நினைத்தாலே உங்களுடைய பிரச்சனை ரொம்ப சிறியதாக மாறிவிடும். உங்களைவிட உங்களது கவலைகள், பிரச்சனைகள் எல்லாம்ரொம்ப சின்னது. நமக்கான நேரத்தை ஒதுக்கினாலலே நாம் சிறந்த முறையில் வாழ்க்கையில் வாழலாம் என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்.