மீண்டும் தளபதி கூட்டணி – 32 வருடங்களுக்குப் பிறகு கைகோக்கும் ரஜினி – மணிரத்னம் ?

0
355
- Advertisement -

32 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம்- ரஜினி கூட்டணி இணைய உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த கதையை மணிரத்னம் பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இந்த கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விழாவில் ரஜினி சொன்னது:

அதோடு இந்த படம் இதுவரை உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் ரஜினி- மணிரத்தினம் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் தளபதி படத்தில் மணிரத்னம் உடன் பணியாற்றியது குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

மீண்டும் இணையும் தளபதி கூட்டணி :

அதுமட்டுமில்லாமல் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது குறித்து ரஜினி கேட்டு இருந்தார். அதற்கு மணிரத்தினம், உங்களுடைய ரசிகர்கள் என்னை திட்டுவார்கள் வேண்டாம் என்று சொன்னார் என்று ரஜினி கூறியிருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று மணிரத்தினம் கூறியிருக்கிறார். அதற்கான வேலைகளில் மும்முரமாக படக் குழுவினர் இறங்கி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் மணிரத்தினம், ரஜினிக்கு ஒரு கதை கூறியிருக்கிறாராம். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

மேலும், ரஜினி – மணிரத்தினம் இணையும் இந்த படத்தை லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் தளபதி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மம்முட்டி, அரவிந்த்சாமி, சோபனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது. மீண்டும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம்- ரஜினி கூட்டணியில் உருவாக இருக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement