பாபா படத்துல நடிச்சதுக்கு அப்புறம் என் திரை வாழ்க்கையே க்ளோஸ் ஆகிடிச்சி – ஓப்பனாக பேசிய மனிஷா கொய்ராலா.

0
541
manisha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மணிரத்னம் ஒருவர். மேலும், மணிரத்னம் இயக்கிய “பம்பாய் ” திரைப்படத்தின் மூலம் நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் அறிமுகமானார். இந்த ஒரு படத்திலே தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். நடிகை மனிஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள–இந்திய நடிகை ஆவார். இவர் முதன் முதலில் திரையுலகிற்கு நேபாள மொழியில் ‘ஃபெரி பெட்டாலா’ என்ற படத்தில் தான் நடித்தார். அதற்குப் பிறகு இந்திய சினிமா உலகில் நடிக்க துவங்கினார்.

-விளம்பரம்-

அதுவும் ஹிந்தியில் தான் இவரது முதல் படமான ‘சௌடாகர்’ 1991ல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் அதிகமாக ஹிந்தி, தமிழ் மொழி படங்களில் நடித்து உள்ளார்.அதோடு தமிழில் கமலஹாசனுடன் ‘இந்தியன்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பாபா’, அர்ஜுனுடன் ‘முதல்வர்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

மேலும்,90களில் நடித்த முன்னணி நடிகைகளுக்கு பயங்கர டஃப் கொடுத்த நடிகை என்று கூட சொல்லலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவை எட்டிப்பார்த்தார் மனிஷா கொய்ராலா. இவர் இந்தி மொழி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் பெரிதாக படங்களில் எவற்றிலும் இவர் நடிப்பதில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் கொடுத்திருந்த நேர்காணல் பேசிய மனிஷா கொய்ராலா தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடிக்காத காரணம் ஏன் என்பது குறித்து பேசியுள்ளார்.

திரைவாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த பாபா

அவர் கூறுகையில் “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த “பாபா” படத்திற்கு பிறகு எனக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு பெரிய படத்தில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நடித்தது “பாபா” படம் தான். ஆனால் அந்த படம் பெரும் தோல்வியை தழுவியது. அதனால் அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது. சொல்லப்போனால் “பாபா” படம் என்னுடைய திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது என்று கூட சொலலலாம்.

-விளம்பரம்-

பாபா ரீ ரிலீஸ் :

ஆனால் பாபா படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான போது பெரிய தோல்வியை தவியதாக இருந்தாலும், சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாபா படம் பெரிய அளவில் வெற்றிகரமாக ஓடியது அதனை நானும் தான் பார்த்தேன். ஆனால் அப்போது ஏன் தோல்வியடைந்தது என்று தெரியவில்லை. இப்போது வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சிதான் என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்தார்.

பாபா படம் தோல்விக்கான காரணம் :

கடந்த 2002ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்திருந்த பாபா திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே பெரும் தோல்வியை தழுவியது. இந்த படம் ரஜினிகாந்துடைய வாழ்க்கையிலேயே மிகப்பெரிய தோல்வி படம் என்று அப்போது செய்தி ஊடகங்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அப்போது இருந்த அரசியல் பின்னணியில் இருந்து கிளம்பிய எதிர்ப்புகளும் கதை மற்றும் நடிப்பும் தான் என்று கூறப்படுகிறது. அதிலும் சில சர்ச்சையான காட்சிகளினால் இந்த படம் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி தோல்வியை தழுவியது குறிப்பிடதக்கது.

Advertisement