இயக்குனர் சீனு ராமசாமி செய்த டார்ச்சலால் பிரபல நடிகை சினிமாவை விட்டு விலகி விட்டார் என்று பத்திரிகையாளர் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து சம்மந்தபட்ட நடிகையே விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் சீனு ராமசாமி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.
https://twitter.com/jbismi_offl/status/1727664914045784099
மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் 3 தேசிய விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தில் ஜி வி பிரகாஷ், காயத்ரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் என பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதோடு ஆக்சன் திரில்லர் வகையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.இந்த நிலையில் சீனு ராமசாமி குறித்து பிரபல பத்திரிகையாளர் விமர்சித்து அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், இயக்குனர் சீனு ராமசாமி செய்த டார்ச்சரால் தான் நடிகை மனிஷா யாதவ் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார்.
https://twitter.com/seenuramasamy/status/1727306284897378419
இவர் தமிழில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், அதற்கு பின்பு சீனுராமிசாமி இயக்கும் படத்தில் கொடுத்த டார்ச்சனால் மனிஷா யாதவ் விலகி விட்டார்.பல வருடங்களாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாமல் இருக்கும் படம் இடம் பொருள் ஏவல். இந்த படத்தில் மனிஷா முக்கிய கதாபாத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பின் போது மனிஷாக்கு சீனு ராமசாமி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.
சொல்லவே முடியாத அளவிற்கு கொடுத்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் பிஸ்மியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள சீனு ராமசாமி 'வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்.
https://www.youtube.com/watch?v=QMYII54tziw
ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க... இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என்று பதிவிட்டு ஒரு குப்பை கதை பட ஆடியோ விழா வீடியோ ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள மனிஷா யாதவ் 'சீனு ராமசாமியின் எந்த திரைப்படத்தில் நான் நடித்தேன் இதை முதல் முறையாக இப்போது தான் கேட்கிறேன்.

ஒரு குப்பை கதை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரும் இருந்தார் மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தது போல அவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன் அதனால் எதுவும் மாறிவிடாது நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விஷயத்தில் இருந்து மாறப்போகுது கிடையாது. என்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் வேலை செய்ய வேண்டும். சீனு ராமசாமி சார் சொல்ற விஷயத்தை சரியாக சொல்லுங்கள்' என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் 'நான் அமைதியாக இருப்பதால் என்னை பற்றி சொல்லும் அனைத்தும் உண்மை என்று ஆகிவிடாது. ஏனெனில் விளக்கம் கொடுக்க நான் இருக்கிறேன்' என்று கேப்ஷனையும் போட்டுள்ளார்.






