தன் படத்திற்காக சாலையில் இறங்கி போஸ்டர் ஒட்டிய நடிகை – கேள்வி கேட்ட நபருக்கு தன்மையாக சொன்ன பதில்.

0
453
manja
- Advertisement -

மஞ்சக்குருவி படத்தின் ப்ரோமோஷனுக்காக கதாநாயகி சாலையில் இறங்கி போஸ்டர் ஒட்டும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் எவ்வளவோ அண்ணன்- தங்கை கதைகளை பார்த்திருக்கிறோம். 70 காலகட்டம் தொடங்கி தற்போது வரை அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. அதிலும், பாசமலர், கிழக்கு சீமையிலேயே, திருப்பாச்சி போன்ற பல அண்ணன்-தங்கை பாச கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் மஞ்சக்குருவி. இந்த படத்தை வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக கிஷோர் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் வில்லனாக குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மஞ்சக்குருவி படம்:

இவர்களுடன் படத்தில் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தினுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாமே செய்தவர் அரங்கன் சின்னத்தம்பி. இந்த படத்திற்கு சௌந்தர்யன் இசை அமைத்திருக்கிறார். ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். மிரட்டல் செல்வா இந்த படத்திற்கு சண்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார். மேலும், படத்தில் அண்ணன் வேடத்தில் கிஷோர், தங்கையாக நீரஜா நடித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் பட குழு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில் படம் குறித்து இயக்குனர் அரங்கன் சின்னதம்பி கூறி இருப்பது, இது முழுக்க முழுக்க அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட கதை.

-விளம்பரம்-

இயக்குனர் அளித்த பேட்டி:

இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருக்கிறார். அண்ணன் தங்கை மீது வெறும் பாசத்தை காட்டினால் போதாது அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது என்பதை மையப்படுத்திய படம், அதோட அண்ணன் தங்கை சென்டிமெண்டில் வந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் மக்களிடையில் நல்ல வரவேற்பு பெரும் என்று கூறியிருக்கிறார்.

போஸ்டர் ஒட்டிய நடிகை:

இந்நிலையில் தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காக படத்தின் கதாநாயகி போஸ்டர் ஒட்டும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அதாவது, மஞ்சக்குருவி படத்தின் கதாநாயகி நீரஜா ப்ரோமோஷன்காக சாலையில் இறங்கி போஸ்டர் ஒட்டி இருக்கிறார். இதை பார்த்து அங்கிருந்த நபர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், நான் தான் இந்த படத்தின் கதாநாயகி என்று கூறியிருக்கிறார்.

Advertisement