மன்னர் வகையறா படத்திலும் அசிங்கப்பட்ட ஜூலி ! எப்படினு பாருங்க !

0
4675
mannar-vagaiyara-movie

பிக் பாசில் “கழுவி ஊற்றப்பட்ட” புகழ் ஜூலி. இந்த ஜூலி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’ இன்று ரிலீஸ் ஆனது. பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி, சாந்தினி, சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

mannar-vagaiyara

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் ஜூலியை பிடித்து நடிக்க வைத்திருந்தார் பூபதி பாண்டியன். கிளைமாக்ஸ் காட்சி வரை தியேட்டரில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து சேர்ந்தார் ஜூலி.

படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் என்று பார்த்தால், ஜூலியை நடிக்க வைத்து கலாய்த்துள்ளார் பூபதிபாண்டியன். ஆம், படத்தில் ஜூலி ஒரு புரோக்கரின் மகள். மணக்கோலத்தில் இருக்கும் ஜூலி விமலை திருமணம் செய்யப்போகிறார் என விமல் வீட்டார் நினைக்கிறார்கள்.

julie

இதனால் ஜூலியை திருமணம் செய்ய வேண்டாம்…. மானம் போயிரும்… என கத்துகின்றனர் விமல் வீட்டார். ஆனால் கடைசியில் ஜூலிக்கு திருமணம் ஆனது வேறு ஒருவருடன். கல்யாண மேடையில், ஜூலியை பார்த்து மாப்பிள்ளை,.. ‘இதுக்கு முன்னாடி லவ் பண்ணிருக்கிங்கலா..?’ என கேட்கிறார்.

அதற்கு ஜூலி, லவ்….. என இழுத்து, ‘லவ்… பண்னுனது இல்ல…!! எனக் கூறுகிறார். இந்த இரண்டு சீன்களுக்கு மட்டும் நடிக்க வைத்து ஜூலியை மக்கள் கலாய்க்கவேண்டுமென்றே நடிக்கவைத்துள்ளது போல் இருக்கிறது. இதனால் இந்த அவமானம் தேவையா ஜூலி உனக்கு என ரசிகர்கள் மீண்டும் கழுவி ஊற்ற துவங்கியுள்ளனர்.