ஸ்ரீமதிக்கு பதிலாக சுமதிக்கு நியாயம் கேட்டு மனோ பாலா போட்ட பதிவு – கழுவி ஊற்றிய ரசிகர்களால் பதிவை நீக்கிய மனோ பாலா.

0
821
manobala
- Advertisement -

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து நடிகர் மனோபாலா பதிவிட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் கேலி கிண்டல் செய்யும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான். கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

-விளம்பரம்-

ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீமதி மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறப்படுகிறது. ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. என்றும் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : சமந்தாவை அலேக்கா தூக்கி சுழட்டிய அக்சய் குமார் – வீடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

மாணவியின் மரணத்தில் மர்மம்:

இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்து இருக்கிறது. அதேபோல மாணவியின் பெற்றோர் பள்ளி தரப்பிடம் சிசிடிவி கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று மாணவியின் பெற்றோர்கள் கூறியிருக்கின்றனர். போலீஸ் தரப்பு விசாரித்தது காலையில் மாணவி உடலை காவலர் தரையில் கண்டு எடுக்கும் காட்சி மட்டும் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

மனோபாலா போட்ட பதிவு:

இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தற்போது வேதியல் ஆசிரியர், கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் ஸ்ரீநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர் மனோபாலா மாணவியின் மரணம் குறித்து பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், justice for சுமதி, ஐயோ என்று பதிவிட்டிருக்கிறார்.

மனோபாலாவை கிண்டல் செய்த ரசிகர்கள்:

இதை பார்த்து நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் மனோபாலாவை கிண்டல் கேலி செய்து வருகின்றனர். அதிலும் சிலர், டாக்டர் படத்தில் அர்ச்சனா நடித்தஅர்ச்சனாவின் சுமதி கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இந்த சுமதியா? என்றும் சுமதியே தப்பு இதுல ஐயோவா ? என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து கேலி செய்திருக்கிறார்கள். இதைப் பார்க்க மனோபாலா உடனே தான் போட்ட பதிவை நீக்கி இருக்கிறார்.

Advertisement